ஆண்களுக்கு பச்சை பயறை முகத்தில் தேய்த்தால், முகம் வெள்ளையாகுமா?
பயறு வகைகள் பொதுவாக ஜிங்க்,புரோட்டீன் சத்து நிறைந்த ஒரு உணவுப்பொருள். உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
அதை முகத்தில் தேய்க்க முகப்பொலிவு உடனே ஏற்படாது…நாள் தொடர்ந்து பயன்படுத்த நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அனுபவத்தில் சொல்கிறேன்…
இதை கடலைமாவுடன் கலந்து பயன்படுத்த இன்னும் நல்ல முன்னேற்றம் காணலாம்.
ஆனால் முகத்தில் தேய்த்த பின்னர், வறண்டு விடும் அளவிற்க்கு வைத்துக் கொள்ளக்கூடாது.. சற்று வறண்ட மாதிரி வரும்போதே முகத்தில் பயன்படுத்திருக்கக் கூடியதன் மீது சிறிது சிறிதாக நீர் விட்டு வறண்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்… ஒரு 10 முதல் 15 நிமிடம் வைத்திருத்தல் நல்லது… பிறகு கழுவி விடலாம்…
வறண்ட நிலையில் இருந்து கொண்டே இருந்தால் பின்னால் முகச்சுருக்கம் வர வாய்ப்பு உள்ளது…..
வாரம் ஒருமுறை ஆவிப்பிடித்தால் இந்த மாதிரியான பிரச்சினையில் இருந்து விடுபடலாம். ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள ஸ்போர்கள் திறக்கும்.. இதனால் முகம் தெளிர்ச்சி பெறும்.
நல்ல மாறுதல் பெற்று புதுப்பொலிவு பெற வாழ்த்துக்கள் 💐💐
Tags
சுவாரசியமான தகவல்கள்