ஆண்கள் பெண்களைப் பற்றி தவறாக நினைக்கும் விஷயங்கள் என்னென்ன?
அது நெறய இருக்குங்க…..சொல்லத் தொடங்குனா பெண்களின் உலகமே பொங்கி எழுந்துடும்…னா கோராவுல மட்டும் சும்மா இருந்துடுவாங்களா என்ன?
அதனால ஒரு மூணு மட்டும் சொல்லலாம்னு நெனக்கிறேன்.
1. தன்னிடம் பேசும் பெண்கள் சில பல காரணங்களினால் தன்னை விட்டு விட்டு மற்றவர்(ஆண்)களிடம் மட்டும் பேசும் போது, முதலில் அப்பெண்களை யோக்கியமானவர்கள் என கணித்த அதே ஆண்களின் மனது இப்போது அப்பெண்களை தவறான நடத்தையுள்ளவர்கள் என வாய் கூசாமல் சொல்லி விடும்.
2. தன்னைப் பெற்றவளான அம்மா செய்தால் அவை அனைத்தும் சரியென கருதும் ஆண்கள், தன் மனைவியானவள் செய்யும் போது மட்டும் அவள் செய்தால் தவறாகத் தான் செய்வாள் அல்லது செய்கிறாள் எனும் மனப்போக்கிற்கு உடனே வந்து விடுகின்றனர்.
3. இந்த உலகில் நடைபெறும் காதல் தோல்விகளுக்கு முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே காரணம் என்று மாயையான நிலையில் நின்று கொண்டு ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு எழுதி விட்டு தான் விசாரணையையே தொடங்குகிறது ஆண்களின் உலகம்.
இப்படி நெறய நெறய இருக்குறதால ஒரு சாம்பிளா 3 மட்டும் சொல்லிட்டேன்.
அதோட பெரும்பான்மையானோரின் மன நிலையை அடிப்படையாக வைத்து தான் இந்த பதில் எழுதப்பட்டுள்ளது என்று உறுதி கூறிக்கொண்டு, யாரையும் எந்த பெண்/ஆணையும் தனிப்பட்ட முறையில் குறை கூறவில்லை என்பதையும் சொல்லிகொள்ள விரும்புகிறேன்.
Tags
சுவாரசியமான தகவல்கள்