என் மனைவி வயது 29, அவள் வேலை செய்யும் முதலாளியோடு வயது 58. இருவரும் இரண்டு வருடமாக உறவில் உள்ளார்கள். தடுத்து பார்த்து எந்த பயனும் இல்லை தற்போது ஒன்றும் கூறாமல் விட்டு விட்டேன். இதை என்ன செய்யலாம்?
29 வந்து 58க்கு எப்படி மேட்ச் ஆனது என்று தெரியவில்லை. ஒருவேளை அது கட்டாயத்தின் பேரில் கூட இருக்கலாம். அல்லது பணத்தாசை ஒரு காரணமாக இருக்கலாம். உண்மையான விருப்பமாக இருக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. அதனால் உங்கள் மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள். என்ன காரணம் என்பதைக் கண்டறியுங்கள். அவள் திருந்தி வாழ்வதாகச் சொன்னால் உங்களது பெருந்தன்மையைப் பொறுத்து நீங்கள் அவளுடன் சேர்ந்து வாழுங்கள்.
அல்லது உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்றாலோ உங்கள் மனைவியை திருத்தவே முடியவில்லை என்றாலோ நீங்கள் தைரியமாக நீதிமன்றத்தை நாடி விவாகரத்தைத் தொடரலாம். நீங்கள் தற்போது ஒன்றும் கூறாமல் விட்டு விட்டேன் என்று சொல்லும் போது நீங்களும் உங்கள் மனைவியின் செயலை மறைமுகமாக ஆதரிப்பது போலவே உள்ளது.
இது தெரிந்த உடனே கோபம் கொப்பளிக்கக் கேட்க வேண்டிய விஷயமல்லவா? எப்படி விட்டு வைத்தீர்கள் என்று தெரியவில்லை. இதன் பின்னணியில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் மட்டுமே சரியான தீர்வை சொல்ல முடியும்.
என்னதான் மனைவியானவள் அடுத்தவன் கூட போய் உறவாடுகிறாள் என்றால் அதைப் பார்த்துக்கொண்டு எந்த ரோஷம், சூடு, சொரணை உள்ளவனும் சும்மா இருக்க மாட்டான். உடனே ஊர் பெரியவர்களிடம் சொல்லி பஞ்சாயத்து வரை கொண்டு வந்து விடுவான். அல்லது நாகரீகம் கருதி நீதிமன்றத்துக்குச் சென்றுவிடுவான். நீங்கள் ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தான் புரியவில்லை.
பயமா? அல்லது தொடர்ந்து பணம் நிறைய வருகிறதா? அது வராமல் போய்விடும் என்ற பரிதவிப்பா? மனைவியா, பணமா என உள்ளூர போராட்டமா? அது உங்களுக்கே வெளிச்சம். உன் வாழ்க்கை உன் கையில் என்பதை மனதில் கொண்டு இனியாவது எடுக்கும் முடிவை நல்ல முடிவாக எடுங்கள்.
Tags
சுவாரசியமான தகவல்கள்