உங்களுக்குப் பிடித்த எந்த நடிகர், சமீபத்தில் உங்களுடைய மரியாதையை இழந்து விட்டார்?

உங்களுக்குப் பிடித்த எந்த நடிகர், சமீபத்தில் உங்களுடைய மரியாதையை இழந்து விட்டார்?

உங்களுக்குப் பிடித்த எந்த நடிகர், சமீபத்தில் உங்களுடைய மரியாதையை இழந்து விட்டார்?

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமார் அவர்கள் மேல் தனிப்பட்ட மரியாதை கூடிய நல்ல அபிமானம் இருந்தது. அவரது குடும்பத்தினர் மீதும் நல்ல அபிப்பிராயம் இருந்தது. நடிகர் சிவகுமார் அவர்கள் மிகவும் எளிமையான மனிதர், சிறந்த பேச்சாளர், சிறந்த ஓவியர், யோகா பிரியர், ஒழுக்கமுள்ள மனிதர் போன்ற பல நல்ல விஷயங்கள் சிவகுமார் அவர்களிடம் இருக்கிறது. குறிப்பாக தனது அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய ஏழை மாணவர்கள் கல்வி உதவி பெறுகிறார்கள். ஆனால் அகரம் பவுண்டேஷன் மூலம் உதவி பெற நிறைய நிபந்தனைகள் உண்டு. எல்லாருக்கும் எளிதில் கிடைக்காது. இதிலும் அரசியல் இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் ரசிகர்கள் செல்ஃபி எடுத்த கோபத்தில் இரண்டு முறை செல்போன்களை உடைத்தார் சிவகுமார் அவர்கள். ரசிகர்கள் சினிமா பிரபலங்களை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள். அதனால் அவர்களை கண்டவுடன் புகைப்படங்கள் எடுக்கிறார்கள். ஒரு புகைப்பட படத்தால் என்ன நஷ்டம் வரப்போகிறது நடிகர்களுக்கு?

உங்களுக்குப் பிடித்த எந்த நடிகர், சமீபத்தில் உங்களுடைய மரியாதையை இழந்து விட்டார்?

இவர்கள் சினிமாவில் நடிக்கும் போது எத்தனை புகைப்படங்கள் எடுக்கிறார்கள். காசு வாங்கி கொண்டு தான் கேமரா முன் நடிக்கின்றனர். ஆதலால் ரசிகர்களும் சிவகுமாரிடம் காசு கொடுத்து செல்ஃபி எடுத்தால் ஒத்துழைப்பு தருவார். ஓசியில் செல்ஃபி எடுத்தால் கண்டிப்பாக கோபம் வரும் சிவகுமாருக்கு… இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்குப் பிடித்த எந்த நடிகர், சமீபத்தில் உங்களுடைய மரியாதையை இழந்து விட்டார்?

இந்திய சினிமாவில் சிவகுமார் மட்டும் தான் தனது இருபிள்ளைகளுக்கும் சொந்த படங்கள் எடுத்து அறிமுகப்படுத்தவில்லை. அவ்வளவு உஷாரான மனிதர் சிவகுமார். இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போது இவர் மகன்கள் நடிக்கும் பெரும்பாலான படங்கள் சொந்த தயாரிப்புகள் தான். சிவகுமார் மட்டும் அல்ல அவரது மொத்த குடும்பமும் உஷார் தான்.

உங்களுக்குப் பிடித்த எந்த நடிகர், சமீபத்தில் உங்களுடைய மரியாதையை இழந்து விட்டார்?

பருத்தி வீரன் படம், எப்பேர்ப்பட்ட காவியம். அமீரின் உழைப்பால், பருத்தி வீரனில் நடித்த நடிகர் கார்த்தி மற்றும் நடிகை பிரியாமணி ஆகியோருக்கு நல்ல பெயரும் புகழும் கிடைத்தது. குறிப்பாக பிரியாமணி அவர்கள் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பராசக்தி போல், நடிகர் கார்த்தி அவர்களுக்கு முதல் படம் சிறந்த அறிமுக படமாக அமைந்தது. ஆனால் செய்ந்நன்றி மறந்து, தன்னை உருவாக்கிய இயக்குனர் அமீர் அவர்களுக்கு துரோகம் செய்து விட்டார் கார்த்தி.‌

உங்களுக்குப் பிடித்த எந்த நடிகர், சமீபத்தில் உங்களுடைய மரியாதையை இழந்து விட்டார்?

சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு கூட சிவகுமார் அவர்களின் குடும்பத்தினர் ஒருவர் கூட நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தவில்லை. இத்தனைக்கும் கார்த்தி நடிகர் சங்கத்தில் பொருளாளர் பதிவி வகிக்கிறார். ஆனால் முன்னாள் நடிகர் சங்க தலைவருக்கு உரிய இறுதி மரியாதையை செலுத்த தவறி விட்டார்கள் அல்லது தவிர்த்து விட்டார்களா ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

உங்களுக்குப் பிடித்த எந்த நடிகர், சமீபத்தில் உங்களுடைய மரியாதையை இழந்து விட்டார்?

வேடிக்கை என்னவென்றால் விஜயகாந்த் சமாதிக்கு சென்று வசனம் எல்லாம் பேசி நன்றாகவே நடித்திருக்கிறார்கள் சிவகுமார் குடும்பத்தார்கள். இதில் சிறப்பாக அழுதுகொண்டு நடித்தது நம்ம சூர்யா தான். சினிமாவில் கூட சூர்யா அழுது பார்த்தது இல்லை. அவ்வளவு துக்கம் இருந்தால், நேரில் வந்து இருக்கலாமே. இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியம். இவர்களுக்கு மனசு இல்லை. இவர்களுக்கு நல்ல மனசு இருந்தால் ஏன் பருத்தி வீரன் அமீருக்கு துரோகம் செய்து விட்டு, தற்போது வரை அவருக்கு பணம் தராமல் இழுத்தடிக்கிறார்கள்.

உங்களுக்குப் பிடித்த எந்த நடிகர், சமீபத்தில் உங்களுடைய மரியாதையை இழந்து விட்டார்?

சிவகுமார் உபதேசம் ஊருக்கு மட்டுமே செய்வார். ஆனால் தனது பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை கற்று கொடுக்க தவறிவிட்டார். சிவகுமார் மட்டுமல்ல அவரின் குடும்பத்தினர் வேஷமும் களைந்து போனது. இவர்கள் மீது இருந்த நன்மதிப்பும் மரியாதையும் இழந்து விட்டார்கள்.

இதில் நடிகர் அஜித்குமார் அவர்களும் அடங்குவார் அவரைப்பற்றி கூற வேண்டும் எனில் சிறப்பாக நிறைய விஷயங்களை கூறலாம் அதை அடுத்து வரும் பதிவில் தெளிவாகக் கூறுகிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது www.dinavidiyal.in
Previous Post Next Post

نموذج الاتصال