நடு இரவில் பிரச்சனைகள் ஏன் மோசமாக தோன்றுகிறது...?

நடு இரவில் பிரச்சனைகள் ஏன் மோசமாக தோன்றுகிறது...?


நடு இரவில் பிரச்சனைகள் ஏன் மோசமாக தோன்றுகிறது...?


அனுதின வாழ்வில் நாம் சந்திக்கும் போராட்டங்கள் ஆழ்மனதை அவ்வப்போது கலைத்து எதிர்பாராத மன சஞ்சலத்தை, எதிர்பாராத நேரத்தில் நமக்கு கொடுத்துக் கொண்டேதான் வருகிறது. அதிலும் குறிப்பாக நடு இரவில் நம் மன எண்ணோட்டங்கள் அலை மோதிக் கொண்டிருக்கிறது.

நாம் பகல் நேரத்தில் சூழ்நிலைகள் மோசமாக இருந்தாலும், அதை யாரிடமாகவோ பகிர்ந்து கொண்டு அடுத்தக்கட்ட செயலில் இறங்கி விடுவோம். ஆனால், நடு இரவு அப்படி அல்ல.


நாம் தனிமையை அதிகமாக உணரும் நேரம். சிறு வயதில் இருந்தே, நடு இரவு என்றால் பேய்கள் உலாவும் நேரம் என்றே பழக்கப்படுத்தி விட்டார்கள். ஆனால், எனது‌ மனம் தான் பேயை போல அந்நேரத்தில் உணருகிறேன். அது தவறான சிந்தனைகளை கொடுத்து என் நிம்மதியை அழிக்கிறது.

நடு ஜாமத்தில் மோசமான சூழ்நிலைகள் வராமல் இருந்தாலும், நாமே மோசமான நினைவை‌‌ உருவாக்கி அந்த வட்டத்திற்குள் வந்து விடுகிறோம்.

நமது சிந்தனைகளை கட்டுப்படுத்தாவிட்டால், அது நினைக்கும் நேரத்தில் நம்மை கட்டுப்படுத்தி விடும். இரவில், செய்திகளை பார்ப்பதை தவிர்த்து, நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்து வந்தாலே பல இரவு நிம்மதியாக இருக்கும். மேலும், நல்ல சம்பவங்களை குறித்த தியானமே உங்கள் ஆழ்மனதில் ஓங்கி இருக்கட்டும். இனி வரும் இரவுகள் இன்பமானதாக, உங்கள் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதலாக இருக்கட்டும்! ☺️

பதில் 2


உளவியல் படி இரவு நேரங்களில் மனித மூளை பகலை விட அதிக வேலை செய்யும். பகல் நேரங்களில் நாம் வேறு வேலையில் ஈடுபட்டு இருப்போம். மூளை நமக்கு அந்த வேலைகளை செய்ய உதவி செய்கிறது.


பொதுவாகவே நம் மூளை இரவு நேரங்களில் அன்றைய பகல் பொழுதில் நடந்த நிகழ்வுகளை ஒரு முறைக்கு இரு முறை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். அதில் மகிழ்ச்சியான நிகழ்வுகளும் அடக்கம். ஆனால் நமது சோகமான நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் மட்டுமே நம் மூளை நமக்கு அதிகமாக நினைவு படுத்தும்( most dominant). ஏனெனில் மகிழ்ச்சியான நிகழ்வை முடிந்த ஒன்றாகவே மூளை கருதும். பிரச்சனை நாம் சரி செய்ய வேண்டிய ஒன்று. அதை சரி செய்ய நாம் இன்று எந்த செயலும் செய்யவில்லை என்று தான் நம் மூளை நமக்கு நினைவுபடுத்துகிறது.

பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனை எப்போதுமே மூளைக்கு இருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். அந்த வேலை உங்களுக்கு பிடிக்கவில்லை. வேலை செய்யும் நேரத்தில் உங்கள் மூளை 'சீக்கிரமாக இந்த வேலையை மாற்றி கொள்ளவேண்டும்' என்று யோசிக்கும். 

ஆனால் இரவு நேரங்களில், வேறு வேலை எப்படி தேடிவது? இதே சம்பளம் அல்லது இதை விட அதிகமான சம்பளம் அந்த வேலையில் கிடைக்குமா? அந்த வேலைக்கு நம்மை எப்படி தயார் செய்வது? இப்பொழுது இருக்கும் இந்த வேலையை விட்டு விட்டால் என்ன நன்மைகள் என்ன தீமைகள்?' இந்த மாதிரியான சிந்தனைகள் வரும்.

பகல் நேரங்களில் நம்மை சுற்றி உள்ளவற்றை நம் மூளை படம் பிடித்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு சத்தத்தையும் கூட சேகரித்துக் கொண்டே இருக்கும். ஆனால் இரவு நேரங்களில் அமைதியாகவும் இருளாகவும் இருக்கும். எனவே மூளை நமக்கு நினைவு படுத்தும் வேலையை தான் இரவில் செய்யும்.

உளவியல் படி இருள் மற்றும் அமைதியான சூழ்நிலை மனிதர்களுக்கு பயம் மனஅழுத்தம், வெறுப்பு, தனிமை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை தான் உருவாக்கும்.( உதாரணமாக இருளை கண்டால் சிலருக்கு பயம் வருவது. ) அதனால் தான் எதிர்மறையான நம் பிரச்சனைகள் மட்டும் நினைவு வரும்.
Previous Post Next Post

نموذج الاتصال