சத்தமாக வாயு வெளியேற்றுவதால் நாற்றம் அடிப்பதில்லை ஆனால் ஊமைக்குசு விடும்போது நாற்றமடிக்கின்றது, அது ஏன்?
அன்பரே,
வழக்கமான அளவை விட அதிகமாக காற்றை விழுங்குதல், அதிகமாக சாப்பிடுதல், புகைபிடித்தல் அல்லது சூயிங்கம் மெல்லுதல் போன்றவற்றால் அதிகப்படியான மேல் குடல் வாயு ஏற்படலாம். சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், உணவுகளை உடலால் முழுமையாக ஜீரணிக்க இயலாது அல்லது பெருங்குடலில் காணப்படும் இ கோலி( உணவை செரித்து வெளியே தள்ளுவதில் முக்கிய பங்கு வகிக்ககின்றது) பாக்டீரியாக்களில் பணியை சரிவர செய்யாது இடையூறு ஏற்படும்.
இந்நிலையில் மேற்குடலில் அழுத்தபட்ட காற்று பெருங்குடல் மற்றும் சிறுகுடல் வழியாக மலக்குடலை அடைந்து மலப்புழை வழியாக வெளியேற முயற்சிக்கும்.
மலக்குடலில் மல அடைப்பு ஏதும் இல்லை என்றால் அதிக சப்தத்துடன் வெளியேறும் ஆனால் துர்நாற்றம் அடிப்பதில்லை.
மல அடைப்பு இருந்தால் அம்மலத்துடன் இக்காற்று கலந்து கிட்டதட்ட சாண எரிவாயு போல் ஆகி துர்நாற்றத்துடன் அமைதியாக வெளியாகிறது. அதில் கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஜன், கந்தகம், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலந்துள்ளது.
ஆகவே பிள்ளைகளுக்கும்/ உடம்புக்கு முடியாத முதியோர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள் தினமும் மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்காமல் கழிக்க வேண்டும் என்பதை!!!
நன்றி.