சுய இன்பத்தால் முடி உதிர்வது ஏற்படுமா? அப்படி ஏற்ப்பட்டால் தீர்வுதான் என்ன...?

சுய இன்பத்தால் முடி உதிர்வது ஏற்படுமா? அப்படி ஏற்ப்பட்டால் தீர்வுதான் என்ன...?


சுய இன்பத்தால் முடி உதிர்வது ஏற்படுமா? அப்படி ஏற்ப்பட்டால் தீர்வுதான் என்ன...?


நான் சுயஇன்பம் செய்த பிறகு என்னால் தலைமுடி உதிர்வு என்னும் பக்க விளைவு உணர முடிகிறது. ஒரு வேளை ஆபாச படம் பார்த்து சுய இன்பதில் ஈடுபடுவதால் ஏற்படுகிறதா? இல்லை அனைவருக்கும் இயற்கையாக முடி உதிர்வு ஏற்படுமா? தீர்வு என்ன?

உண்மையில் சுய இன்பத்திற்கும் தலைமயிர் உதிர்விற்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை.

ஆனால் மனவுலைச்சலுக்கும் தலைமயிர் உதிர்விற்கும் நேரடித்தொடர்பு சர்வ நிச்சயம் உண்டு அன்பரே!

பிசிராந்தையார் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு வயது ஆகிக் கொண்டே இருந்தது. இருந்தும், முடி நரைக்கவே இல்லை. அவரிடம் கேட்டார்கள், "எப்படி உங்களுக்கு மட்டும் முடி நரைக்கவே இல்லை" என்று கேட்டதற்கு அவர் இந்தப் பாடலைப் பாடினாராம்.

யாண்டுபல  வாக  நரையில  வாகுதல் 
யாங்கா  கியரென  வினவுதி  ராயின் 
மாண்டவென்  மனைவியொடு  மக்களு  நிரம்பினர் 
யாண்கண்  டனையரென்  னிளையரும்  வேந்தனும் 
அல்லவை  செய்யான்  காக்கு  மதன்றலை 
ஆன்றவிந்  தடங்கிய  கொள்கைச் 
சான்றோர்  பலர்யான்  வாழு  மூரே 

கொஞ்சம் கடினமான பாடல் தான். சீர் பிரித்துப் படித்தால் எளிதில் விளங்கும்.

ஆண்டு பலவாக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான் கண்ட அனையர் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே
விளக்கம்: சிறந்த மனைவி. நல்ல பிள்ளைகள். செங்கோல் செலுத்தும் அரசன். அடாவடி பண்ணாத ஊர் மக்கள். நல்லதை எடுத்துச் சொல்லும் பெரியவர்கள் இருந்தால் ஏன் கவலை வருகிறது. ஏன் முதுமை வருகிறது

இதே பதில் தான் உங்கள் தலைமயிர் உதிர்விற்கும். உங்கள் மனவுலைச்சலே உங்கள் தலைமயிர் அதிகம் உதிர்வதற்கும் காரணம்.

உண்மையில் சுய இன்பம் செய்வதால் பல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதாக மருத்துவம் தெரிவிக்கிறது.

ஆதிகாலந்தொட்டே சுய இன்பம் என்பது மனிதர்களுடன் தொடர்ந்து இருப்பதை திருக்குறள் போன்ற சில சங்க இலக்கியங்களில் பசலை நோய்க்குத் தீர்வாக தலைவனும் தலைவியும் சுய இன்பத்தினைப் புரிந்ததை அறியலாம்.

சுய இன்பம் என்பது ஒரு தற்காலிகமான காம எண்ணத்தின் வடிகால் மட்டுமே என்பதைப் பலர் உணர்ந்துகொள்ள வேண்டும். புணர்வு தொடர்பான மருந்துகளை விற்கத் தேவைப்பட்ட வியாபார உயுக்திகளில் ஒன்றே இந்த 'சுய இன்பம் செய்தால் பின் விளைவுகள்' என்பதெல்லாம்.

சுய இன்பத்தினால் மனவுலைச்சலும் மனவழுத்தமும் ஓரளவு குறைக்கப்படுவது உண்மை. இதனால் உங்களால் அந்தச் சமயத்தில் சரியாகச் சிந்திக்கவும் முடியும்.

உடலின் இரத்தவோட்டம் சீராகிறது.

புதிய உயிர்ச் செல்கள் உருவாக்கம் என்பது இயற்கையாக தினமும் நம் உடலில் நடந்துகொண்டே தான் இருக்கும். நீங்கள் சுய இன்பம் செய்தாலும், செய்யாவிட்டாலும் தினமும் குறிப்பிட்ட அளவு விந்தணுக்கள் உற்பத்தியாகி விந்துப்பைகளில் சேகரமாகிக்கொண்டே இருக்கும். இது ஒரு ஆணின் பதின் பருவ மாற்றமானது தொடங்கிய நாள் முதலாக வயது முதிர்வு வரை நடந்துகொண்டே இருக்கும் நிகழ்வு!

சுய இன்பம் செய்யாவிட்டால் விந்து அப்படியே தேங்கிவிடும் என்பதெல்லாம் கட்டுக்கதை. சுய இன்பம் செய்யாவிட்டாலும் நமது உடலானது இந்த விந்தணுக்களை கழிவாக வியர்வை, சிறுநீர், மலம் போன்ற கழிவகற்றும் செயல்கள் மூலம் வெளியேற்றிவிடும்.

அதேபோல், சுய இன்பம் செய்வதால் நமது உடலில் சக்தி வீணடிக்கப்படுகிறது என்பதும் ஓரளவு மட்டுமே உண்மை. எங்கே சக்தி செலவு செய்யப்படுகிறதோ அங்கோ புதிய உருவாக்கம் நடைபெறும். அதாவது விந்தணுக்கள் உற்பத்தி என்பது நமது இரத்தத்தில் இருந்து நடைபெறுகிறது. புதிய விந்தணுக்கள் உற்பத்தியினால் செலவழிக்கப்பட்ட இரத்தத்தினை ஈடுசெய்ய நமது உடலானது புதிய இரத்தத்தினை உற்பத்தி செய்யும். ஆதாரமாக, இரத்ததானம் செய்வதால் புது இரத்தம் உற்பத்தியாவது நமக்கு எப்படி நன்மையோ, அப்படி!

ஒரே ஒரு பிரச்சினை என்னவெனில் நீங்கள் அதற்கேற்ற உணவினை உட்கொள்ள வேண்டும். நிச்சயமாக!!

நீங்கள் கூறவது போல, தலைமயிர் உதிர்வென்பது மன உலைச்சல் கொண்ட அனைவருக்கும் இயற்கையானதே. ஆதாரமாக முற்காலங்களை விட மனவுலைச்சல் அதிகமாக அறியப்படும் இன்றைய வாழ்வில் பெரும்பாலான இளைஞர்களே தலைமயிரை இளம்வயதிலேயே இழந்திருப்பது கண்கூடு.

மேலும் சுய இன்பத்தின் போது அதிக ஆற்றல் வெளிப்படுவது என்பது உண்மை தான். ஆனால் அதே அளவு ஆற்றல் தான் மனைவியுடனான கலவியின் போதும் வெளிப்படும்.

நமது உடல் உறுப்புகளுக்கு சுய இன்பம் எது, கலவி எது என்ற வேறுபாடெல்லாம் தெரியாது அன்பரே!!
Previous Post Next Post

نموذج الاتصال