நான் விதவை பெண்ணுடன் வாழ்கிறேன். இப்பொழுது கரப்பமாக உள்ளார். ஆனால் எனக்கு குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லை. நாடோடி வாழ்க்கையை விரும்புகிறேன். என்ன முடிவு செய்வது? மனம் குழப்பமாக உள்ளது.

நான் விதவை பெண்ணுடன் வாழ்கிறேன். இப்பொழுது கரப்பமாக உள்ளார். ஆனால் எனக்கு குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லை. நாடோடி வாழ்க்கையை விரும்புகிறேன். என்ன முடிவு செய்வது? மனம் குழப்பமாக உள்ளது.


நான் விதவை பெண்ணுடன் வாழ்கிறேன். இப்பொழுது கரப்பமாக உள்ளார். ஆனால் எனக்கு குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லை. நாடோடி வாழ்க்கையை விரும்புகிறேன். என்ன முடிவு செய்வது? மனம் குழப்பமாக உள்ளது.


ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்கிறேன் என்று கூறிவிட்டு அந்த பிரச்சினையை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி மேலும் வளர்த்துவது போல் இருக்கக் கூடாது.

ஒரு விதவை பெண்ணுடன் வாழ்கிறேன் எனக்கூறும் சமயத்தில் அந்தப் பெண் விதவை அல்ல! நீங்கள் நல்ல மனமுள்ள மனிதராக இருந்தால் இந்நேரம் தாலி கட்டி தம்பதிகள் ஆகி இருக்க வேண்டும். ஆனால் அதை கூறாமல் விதவை என்று வெட்ட வெளியில் பகிரமாக அறிவித்து கர்ப்பமாக இருக்கிறார் என்றால் அதைவிட கொடூரம் வேறு எதுவும் இல்லை. ஆனால் அதற்கு அந்த பெண் எப்படி சம்மதித்தார்? என்பதும் புதிராக இருக்கிறது.

நல்லது. உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் விருப்பமில்லை. நாடோடி வாழ்க்கையை விரும்புகிறேன் என்றால் கிடைக்கும் இடத்தில் குடித்துக் கொள்ளலாம். விரும்பும் இடத்தில் படுத்துக் கொள்ளலாம் என்று எண்ணம் இருப்பவராக தெரிகிறது. அதற்கு என் இன்னொருவரை பலிகடா ஆக்க வேண்டும்? சாலையோரமாக விலை மாதரிடம் கூட பழகி விட்டுச் செல்லலாமே?

அந்த பெண்ணின் வாழ்க்கையை பற்றி சற்றே பார்க்கலாமா?

நீங்கள் ஊர் அறிய திருமணம் செய்து கர்ப்பமாக இருந்தால் கூட நான்கு பேருக்கு அந்தப்பெண் பதில் கூறிவிடலாம். ஆனால் கணவன் இல்லாத ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் அந்த ஊர் என்ன கூறும்?

சரி அதற்கு அடுத்த விஷயத்தை பார்ப்போம். சில மாதங்கள் கழித்து ஒரு குழந்தை பிறக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். அந்த குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் அது வளரும் சமயம் எவ்வளவு சங்கடங்கள் உடனேயே வளர்ந்து கொண்டிருக்கும்?அதனுடைய மனம் விவரம் தெரியும் வயதில் என்ன பாடுபடும்?

அதுவே பெண் குழந்தையாக இருந்தால், அந்த பெண்ணை வளர்க்கும் சமயம், படிக்கும் சமயம், மணமுடிக்கும் சமயம் அந்த பெண்ணின் தாயார் என்ன படுப்பாடுபடுவார் ?என்று சற்று நினைத்து பார்த்தீர்களா?

அல்லது கர்ப்பமாக இருக்கும் பெண் குழந்தைக்கு தந்தையான நீங்கள் அந்த பெண்ணும் உங்களைப் போல யாரேனும் ஒருவர் ஜஸ்ட் சும்மா என்று பழகி விட்டு உங்கள் பெண்குழந்தை வயிற்றிலும் கொடுத்துவிட்டு செல்வதை நீங்கள் விரும்புவீர்களா? அந்த பெண்ணுக்கு கூட பதில் கூற வேண்டாம். அந்த குழந்தை உங்கள் குழந்தை அல்லவா? அந்த குழந்தைக்கு என்ன பதில் கூறுவீர்கள் ?

உங்கள் மகளுடன் ஒருவர் இதுபோல வயிற்றில் கொடுத்துவிட்டு நாடோடியாக சென்றால் ஏற்றுக்கொள்வீர்களா ?

இதில் மனக் குழப்பத்திற்கே வழி இல்லை. இவ்வளவு நாள் நாடோடி வாழ்க்கையில் சுற்றியதை போல நிறுத்திவிட்டு ,ஆணியடித்தது போல அந்த பெண்ணுக்கு கட்டுப்பட்டு உங்களால் உண்டான ,உங்கள் உயிரான உங்களுக்கு உண்மையான, அந்த குழந்தையை காப்பாற்றுவது ஒன்று மட்டுமே உங்கள் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அதைவிட நாடோடி வாழ்க்கை மேல் என்று தனியே செல்ல வேண்டாம். முடிந்தால் கர்ணன் படத்தை இன்னும் ஒரு முறை பாருங்கள். அதில் அந்த குழந்தை வளர்ந்து எவ்வளவு அவமானம் படுகிறது?என்று பாருங்கள்.

பூமியில் மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் கடவுள் ஒவ்வொரு பணியையும் ,கடமையையும் கொடுத்துள்ளான்.அதனால் தான் மனிதனுக்கு ஆறறிவு.அதை திறம்பட செய்யவில்லையேல் குறைஅறிவு தான்.அவர் மனிதரல்ல.மிருகம்.

எனவே அதேபெண்ணை விரைவில் ஊரறிய திருமணம் செய்து,உங்கள் குழந்தையை பேணிக்காத்து நன்முறையில் வளர்த்து உங்கள் பெயரை ஆதார் கார்டு முதல் பள்ளி அட்மிசன் வரை எழுதுவதற்கு வாழ்த்துக்கள்.

நன்றி!

வணக்கம்.
Previous Post Next Post

نموذج الاتصال