இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் ஓவர் குண்டாம் - ஆய்வு சொல்லுதுஉடல் பருமன் பிரச்னையில் தமிழக பெண்களுக்கு அதிக பாதிப்பு இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது.


உடல் பருமன் என்பது தற்போது அதிகரித்து வரும் ஓர் உடல் நலப் பிரச்னை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வேறுபாடின்றி இருக்கும். மாறி வரும் வாழ்வியல் பழக்கங்கள், உணவு, மன அழுத்தம் என பலக் காரணங்களாக இதற்கு அடுக்குகின்றனர் வல்லுநர்கள். இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


இதையும் படியுங்கள் - ஒரு ஆண் காமத்திற்காக மட்டும் ஒரு பெண்ணோடு பழகுவதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்


அறிக்கையின்படி, ஆண்களை விட பெண்களுக்கு உடல் பருமன் பிரச்னை அதிகமாக இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக தென் இந்தியப் பெண்களுக்கு சற்று தீவிரமாக உடல் பருமன் பிரச்னை இருக்கிறது என அறிக்கை முடிவுகள் சொல்கின்றன.


மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெற்கு மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் 15 முதல் 49 வயதுடைய பெண்களிடம் ஆய்வை மேற்கொண்டது.


தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள், கேரளாவில் 14 மாவட்டங்கள், ஆந்திராவில் 13 மாவட்டங்கள், கர்நாடகாவில் 30 மாவட்டங்கள், தெலங்கானாவில் 31 மாவட்டங்கள் அடங்கும்.


இதையும் படியுங்கள் - திருமணம் செய்த அன்றே கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டுமா


இந்த ஆய்வில், இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, தென் மாநிலங்களில் வாழும் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்னை 24% அதிகம் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிலும் முக்கியமாக, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இந்த பிரச்னை 9.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் 6.9 சதவிகிதத்தில் கர்நாடகா, 5.7 சதவிகித அதிகரிப்புடன் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. தேசிய அளவில் உடல் பருமன் பிரச்னை 3.3% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Previous Post Next Post