பெண்கள் கர்ப்ப காலங்களில் தாயுடன் நெருக்கமாக இருக்கக் காரணம் என்ன தெரியுமா
நான் அவ்வப்போது என் கணவரிடம் இதை கூறுவேன். யாரும் தப்பாக எண்ணவேண்டாம்.
என் குழந்தைகள் எனக்கு என் ரத்தம், என் சதை; உனக்கோ ரெண்டு உயிர் துளிகள் நீ (intentionally) வீணாக்கியவை எத்தனையோ !
நான் தாயான பின்தான் என் தாயின் உணர்வை முழுவதும் அறிந்தேன். என் குழந்தை அழும் போது நான் பதட்டத்தோடு, இரவும் பகலும் சலிப்பில்லாத ஒரு கருணை உணர்வு என்னுள் தோன்றியதை அறிந்தேன். அதே போல் எனக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்த போது, என் கணவர், என் அத்தை ஆகியோரது கவனம் என் பிள்ளை மீது மட்டுமே இருந்தது.
இதையும் படியுங்கள் - பெண்களே கட்டாயம் இதை படியுங்கள் - வாழ்க்கை வாழவே, வாழ்ந்துவிடுங்கள்
ஆனால் என் தாய் தந்தை மட்டுமே நான் படும் வேதனை கண்டு அழுதார்கள். எல்லோரும் குழந்தைக்கு பால் கொடுத்தியா குழந்தைக்கு இத பண்ணு அத பண்ணு என்று என்னை தொல்லை செய்வார்கள்.
என் அம்மா என்ன சொன்னார் தெரியுமா உன் குழந்தையை நீ பார்த்துக்கோ என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்று நான் பார்த்துக்குவேன் என்று என்னை பயிற்றுவித்தார்கள், குழந்தை பெற்ற பின் தாய் வீடு ஒரு நல்ல rehab center என்றே சொல்லவேண்டும்.
Post a Comment