கழுதைக்கு வாக்கப்பட்டா உதபட்டு தான் ஆகனும் - சரியான லூசு கிட்ட மாட்டிக்கிட்டோமே


அவன் : எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?


அவள் : : உன் இஷ்டம்


அவன் : சரவணபவன்?


அவள் : : போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்...?


அவன் : அப்போ செட்டிநாடு...?


அவள் : : எனக்கு புடிக்கல..காரமா இருக்கும்


அவன் : ம்ம் கேஎஃப்சி....?


அவள் : : நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..


அவன் : அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு


அவள் : : உன் இஷ்டம்...


.


.


அவன் : சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?


அவள் : : உன் இஷ்டம்...


அவன் : படத்துக்கு போலாமா....?


அவள் : : இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு...


அவன் : அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?


அவள் : : வேணாம்...


அவன் : காஃபி ஷாப்....?


அவள் : : நான் டயட்ல இருக்கேன்...


அவன் : அப்போ வேற என்னதான் செய்யறது....?


அவள் : : நீயே சொல்லு...


.


.


அவன் : சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....


அவள் : : என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..


அவன் : ஓ... நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல... பஸ்லதான் போகனும்


அவள் : : நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்


அவன் : அப்போ ஆட்டோ..?


அவள் : : வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?


அவன் : அப்போ நடந்து போகலாம்..


அவள் : : என்னால முடியாது, எனக்கு பசிக்குது....


அவன் : அப்போ சாப்பிட்டே போவோம்?


அவள் : : உன் இஷ்டம்...


அவன் : ......(மனதிற்குள் நினைப்பது புகைப்படமாக 👇👇)


சரியான லூசு கிட்ட மாட்டிக்கிட்டோமே.

Post a Comment

Previous Post Next Post