மனைவியை இம்ப்ரெஸ் செய்வது எப்படி - கணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு


அதிகாலையில் என் மனைவியை இம்ப்ரெஸ் செய்வது எப்படி?

அருமையான கேள்வி.


காலையில் அல்ல, அதுவும் அதிகாலையில்.


உங்களை போன்ற கணவர் கிடைக்க உங்கள் மனைவி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.


அதனால் நீங்கள் என்ன செய்தாலும், அவர் இம்ப்ரெஸ் ஆகிவிடுவார்.


அதிகாலையில் நெற்றியில் கொடுக்கிற முத்தம் போதும், உங்கள் மனைவியை மொத்தமாக இம்ப்ரெஸ் செய்வதற்கு.


காபிலாம் போட தெரிஞ்சா போடுங்க, தெரியாம போட்டு காபியையும் கன்றாவியாக்கி, சமையக்கட்டையும் அழுக்காக்கி வச்சி இருந்தீங்கனா,


உங்கள் மனைவி சப்பாத்தி கட்டையை தேடும் நிலை உருவாகும்.


இதையும் படியுங்கள் - இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் ஓவர் குண்டாம் - ஆய்வு சொல்லுது


பலரும் காபி போட்டு கொடுங்கள் என பதில் எழுதி இருந்தார்கள், அதனால் தான்.


இந்த காபி மேட்டர் டிவியில வர்ற விளம்பரத்துக்கு வேனும்னா செட் ஆகும்.


உங்கள் மனைவி அந்த விளம்பரத்தில் வரும் கதாநாயகி போல மென்மையாக இருக்க வாய்ப்பு உண்டா என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.


அதேபோல் நீங்களும் அந்த விளம்பரத்தில் வரும் கதாநாயகன் போல சுவையான காபி போடவும் வாய்ப்புகள் குறைவு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


நமக்கு வர்றத செய்யனும், அதவுட்டு அடுத்தவன் செஞ்சத செஞ்சீங்கனா உங்கள உங்க மனைவி வச்சு செஞ்சிடுவாங்க.


அதனால , காலையில எந்திரிக்கும்போது ஒரு முத்தம் கொடுங்க, அதுக்கு என்ன ரியாக்சன்னு பாருங்க, நல்ல ரியாக்சனா இருந்தா,


செல்லம், உனக்கு சமையக்கட்டுல எதாச்சும் நான் உதவி பண்ணட்டுமானு கேளுங்க. இதுவே போதும்.


இல்லாம முத்தம் கொடுத்ததுக்கே , ரியாக்சன் வேற மாதிரி இருந்தா, பேசாம பெட்சீட்ட மூடிக்கிட்டு தூங்கிடுங்க.


மறுநாள் பாத்துக்கலாம்.


விடுங்க பாஸ்.


விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி யா ஒருநாள் மாறும்.

Post a Comment

Previous Post Next Post