ஒரு பெண் உச்சக்கட்டம் அடையவில்லை என்பதை கண்டுபிடிக்கும் வழிகள்


செக்ஸ் விஷயத்தில் சமயம், சந்தர்ப்பம், சூழ்நிலை என எல்லாவற்றையும் அறிந்துகொண்டு அதற்குத் தகுந்த மாதிரி நடப்பவர்களே, பெண்களால் நேசிக்கப்படுபவர்கள்.


காம உறவில் ஒருவரது திறமை எப்படி அளவிடப்படுகிறது


நீண்ட நேரம் உறவில் ஒருவர் உறவில் தாக்குப்பிடிக்கிறாரோ அவர் மட்டுமே நேசிக்கப்படுபவரா. இல்லைவே இல்லை. எதைச் செய்யகூடாது? எதை எப்போது செய்யக் கூடாது? எதைச் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என அறிந்தவரே நிஜமான திறமைசாலி. பெண்களால் நேசிக்கப்படுபவர்.


ரூல்ஸ் நோட் போட முடியாது


காம உறவில் பின்னிப்பிணைந்து மெய்மறந்த நிலையில் இருக்கும்போது, இதைத்தான் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்க முடியாது. அந்த நேரத்தில் செய்யும் செயல்கள் எல்லாம் கனவுகளைப் போலவே ஒழுங்கற்ற வரிசையில் இருக்கும். புதுப்புது யோசனைகள் தோன்றலாம். இப்படிக் கற்பனை செய்ய முடியாத விஷயங்களை எப்படி விவரித்து இப்படிதான் செய்யவேண்டும் என ரூல்ஸ் நோட் போட முடியாது.


தன்னுடைய பலம், தன்னோடு உறவில் இணையும் பெண்ணின் பலம், உடல்நிலை போன்றவற்றை அறிய வேண்டும். இதுதான் முதல் விஷயம். தனது செயல்களில் அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்பதைப் புரிந்துகொண்டு அந்தப் பெண்ணுக்கு எது விருப்பமோ அதைச் செய்யவேண்டும். அதையும் மென்மையாக, பொறுமையாகவே கையாளுவது முக்கியம். இது இரண்டாவது விஷயம்.


பெண்ணின் விருப்பம், உடல் நிலை, தேசம், காலம் என எல்லாவற்றையும் பார்க்க சொல்கிறது காமச்சூத்திரம். இது புரியாமல் மேல்நாட்டு செக்ஸ் பாணியை இங்குள்ள பெண்களுடன் முயற்சிப்பது பிரச்சனையில் கொண்டு செல்லும்.


இதையும் படியுங்கள் - பெண்கள் மாதவிலக்கின் போது கடைப்பிடிக்கும் வழிமுறை


தவறான நம்பிக்கைகள்


காம உறவில் ஆண்தான் துடிப்பாகச் செயல்பட வேண்டும். பெண் சும்மா ஒத்துழைப்புக் கொடுத்தால் மட்டும் போதும் என்ற கருத்துப் பரவி, சூழ்ந்திருக்கிறது. இப்படி இல்லாமல் பெண் ஆர்வம் காட்டி செக்ஸில் செயல்பட்டால், அவளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு விமர்சனத்துக்கு ஆளாகிறாள் பெண். இப்படி செக்ஸ் விஷயத்தில் நிலவும் தவறான நம்பிக்கைகள் உடைய வேண்டும். கணவன் - மனைவி இருவரில் யார் வேண்டுமானாலும் காம உறவில் ஆதிக்கம் செலுத்தலாம். அப்போதுதான் உறவு இனிக்கும். இதைக் காமச்சூத்திரம் சொல்கிறது.


கணவன் களைத்துபோனால் மட்டுமே மனைவி செக்ஸில் பங்கெடுக்க வேண்டும் என்றில்லை சாதாரணமாகவேகூடப் பெண்கள் ஆதிக்கம் செலுத்தலாம். இதனால் தவறு இல்லை. காம உறவில் சுவாரசியம் அதிகமாகும்.


ஒரு பெண் உச்சக்கட்ட இன்பத்தை அனுபவித்து விட்டாள் என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகச் சொல்லப்படுவது. கண்களை மூடிக்கொள்வது, வெட்கத்தைத் துறந்துவிடுவது, எல்லைமீறி நடந்துகொள்வது, ஆரம்பத்தில் இறுக்கமாக அணைத்து தன் பக்கம் இழுக்கும் செயலை, உச்சம் அடைந்ததும் தளர்ந்துபோய் விழுகிறாள் எனக் காமச்சூத்திரம் சொல்கிறது.


இதையும் படியுங்கள் - சுய இன்பம் பற்றிய தவறான தகவல் இவை தான்


வேகமும் தீவிரமும்


இதையே செக்ஸ் அறிஞர்கள் அவர்களது ஆராய்ச்சிகளில் சொன்னவை. உறவில் வேகமும் தீவிரமும் ரொம்பவே அதிகரித்து, உச்சத்தை நெருங்கும்போது கண்களை இறுக்கமாக மூடிக்கொள்வாள். பிறகு சட்டென எல்லாத் தசைகளும் தளர்ந்துவிட, அப்படியே தளர்ந்துபோய் விழுவாள். இதுதான் நவீன செக்ஸ் அறிஞர்களின் கண்டுபிடிப்பு. இதை முன்னதாகவே காமச்சூத்திரம் சொல்லிவிட்டது.


ஒரு பெண் உச்சக்கட்டம் அடையவில்லை என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியும். உச்சக்கட்டத்தை அடையாமல், இன்னும் இன்பம் தேவைப்படுகிறது என்பதை உணர்த்தவும் அறிகுறிகள் உள்ளன. அவள் தன் கைகலை உதறுவாள். உடல் முழுக்க வியர்க்கும். அவள் மீது உள்ள ஆணை எழுந்திருக்க விடமாட்டாள். மேலும், உறவு வேண்டும் என்பதை இழுத்து உணர்த்துவாள்.. முத்தமிடலாம். கட்டி அணைத்து இழுக்கலாம். இப்படிப் பெண்ணுக்குப் பெண் செயல்களில் மாறுபாடுகள் இருக்கலாம். பெரும்பாலான செக்ஸாலஜிட் நிபுணர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். உச்சக்கட்டத்தை அடைவதற்கு முன்பாகவே சில பேருக்கு இப்படியான அறிகுறிகள் இருக்கும். கை, கால்களில் விரல்கள் இறுகி, உடல் வளையும். உடல் வியர்க்கும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், இவற்றைப் பெண்களிடம் கவனித்தால் அவளுக்குச் சீக்கிரம் உச்சகட்ட இன்பத்தை ஏற்படுத்துவதற்காக ஆண் தனது கைவிரல்களால் அவளது பெண் உறுப்பை உரசி தூண்டிவிட வேண்டும். உரசுதல் என்பது மென்மையான செயலாக இருத்தல் அவசியம். இதனால், அப்படி உரசும்போது பெண்ணுறுப்பில் ஒரு திரவம் சுரக்கும். அதன் பிறகே ஆண் தனது பிறப்புறுப்பைப் பெண்ணுறுப்பில் நுழைக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது

Post a Comment

Previous Post Next Post