தேவை இல்லாமல் நிறைய போன் கால் வருதா - இது மட்டும் செய்யுங்க போதும்


வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது பிற முக்கிய பணிகளில் இருக்கும் போது ஒரு அழைப்பு வரும். மெசேஜ், மெயில், சமூகவலைதள கணக்கு தகவல், செயலி அறிவிப்புகள் என பலவகையில் நோட்டிபிகேஷன்கள் வரும்.


இதை அனைத்தும் முடக்குவதற்கான வழிகள் இருக்கிறது. அதேசமயத்தில் உங்கள் போனில் வரும் அனைத்து அழைப்புகளையும் உடனடியாக முடக்குவது எப்படி என்பது குறித்தும் பார்க்கலாம்.


Do Not Disturb மோட்


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் இந்த அம்சம் கிடைக்கிறது.


அதாவது 2015 ஆம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ ஓஎஸ் இல் இருந்தே Do Not Disturb mode கிடைக்கிறது.


உங்கள் மொபைலில் தொடர்ந்து வரும் அறிவிப்புகளை நீங்கள் விரும்பாத பட்சத்தில் Do Not Disturb அம்சத்தை இயக்கிக் கொள்ளலாம்.


நோட்டிபிகேஷன் பகுதியை கீழே ஸ்வைப் செய்யவும் இதில் Do Not Disturb மோட் இருக்கும் அதை இயக்கிக் கொள்ளலாம்.


இதையும் படியுங்கள் - 4 ஜிபி மெமரி கார்டில் 128 ஜிபி சேமிப்பது எப்படி


பல அம்சங்கள் இருக்கும்


நோட்டிபிகேஷன் பகுதியில் Do Not Disturb பார்க்க முடியாவிட்டால், அதில் பென்சில் போன்ற ஒரு ஐகான் இருக்கும். இதை கிளிக் செய்து கொள்ளவும்.


இதில் பல அம்சங்கள் காட்டப்படும். இந்த அம்சங்களில் Do Not Disturb மோட் இருக்கும் இதை கிளிக் செய்து கொள்ளவும். இதை கிளிக் செய்து நோட்டிபிகேஷன் பகுதிக்கு இழுக்கவும். பின் இது நோட்டிபிகேஷன் பகுதியில் செட் ஆகிவிடும். இதன்மூலம் இந்த அம்சத்தை இயக்கிக் கொள்ளலாம்.


Call Barring முறை


அழைப்புகளை தடை செய்வது என்பது உங்களை தொந்தரவில் இருந்து விடுபட்டு தனித்து வைக்க ஒரு சிறந்த தேர்வாகும்.


உங்களுக்கு எந்த நம்பரில் இருந்தும் போன் வராமல் தடுக்க இந்த அம்சம் உதவுகிறது. அதேபோல் இந்த அம்சத்தை நீங்கள் outgoing கால்களுக்கும் மேற்கொள்ளலாம்.


இதையும் படியுங்கள் - ஸ்மார்ட்போனின் இணையவேகத்தை அதிகரிப்பது எப்படி


இயக்குவது எப்படி?


இந்த அம்சத்தை இயக்க செட்டிங்க்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்து CallsStep என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.


இதன் அழைப்பு அமைப்புகளில் Call BarringStep என்ற விருப்பம் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.


இப்போது All Incoming என்ற விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளவும்.


இதில் பாஸ்வேர்ட் கேட்கப்படும் இந்த பாஸ்வேர்ட் அதிகபட்சம் பொதுவானதாகவே இருக்கும். அது 0000 அல்லது 1234 ஆக இருக்கலாம். இதை டைப் செய்து Turn On என்பதை கிளிக் செய்து கொள்ளலாம்.


மூன்றாம் தரப்பு பயன்பாடுகள்


மூன்றாம் தரப்பு பயன்பாடுகளின் மூலம் நீங்கள் தேவையற்ற அழைப்புகளை பிளாக் செய்து கொள்ளலாம். இது தேவையற்ற அழைப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.


Only Contacts என்ற விருப்பம்


பெரும்பாலான மூன்றாம் தரப்பு அம்சங்களில் Only Contacts என்ற விருப்பம் இருக்கும். இந்த அம்சத்தை இயக்கிக் கொண்டால் உங்கள் தொடர்பு பட்டியலில் இருக்கும் நபர்கள் மட்டும் உங்களை தொடர்பு கொள்ள முடியும். பிற எந்த எண்ணில் இருந்தும் உங்களுக்கு அழைப்புகள் வராது. தேவையற்ற எண்ணை மட்டும் பிளாக் செய்யலாம்

Post a Comment

Previous Post Next Post