பெண்கள் அனைவருக்கும் எவரும் அறியாத அந்தரங்கம் ஒன்று இருக்கும்


மனிதர்கள் என்றாலே, அவர்களுக்கு என்று, எவரும் அறியாத அந்தரங்கம் ஒன்று இருக்கும்.


( யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீட்டில் பூத்துள்ள பூவை பறிப்பது கூட)அது சற்று கேவலமாக கூட இருக்கும்.


நாம் பழகும் மனிதர்கள், நட்பு வட்டங்கள், சுற்றத்தார் வகையில் இருக்கும் சிலருக்கு வெளியே சொல்லத்தகாத சில அந்தரங்க வாழ்க்கை இருக்கக் கூடும்.


உங்கள் தம்பிக்கோ, மகனுக்கோ தீய நண்பர்கள் சகவாசம் இருக்கலாம். தங்கைக்கோ, மகளுக்கோ , நீங்கள் விரும்பாத காதல் இருக்கலாம். அதற்காகத்தான் நாம் கவலைப்பட வேண்டும்.


அதை விட்டு விட்டு, அந்த நடிகை யாரோடு கள்ள காதலில் இருந்தார்? அந்த நடிகை எத்தனை முறை கருக்கலைப்பு செய்தார் என்ற பர்சனல் விவரங்கள் எல்லாம் நமக்கு எதுக்கு? லைம் லைட்டில் இருப்பதால், அவர்கள் அழுத்தமாக மூச்சு விடுவதை கூட செய்தியாக்கி விடுகிறார்கள்.


இதையும் படியுங்கள் - சுய இன்பம் பற்றிய தவறான தகவல் இவை தான்


நம்மை போலவே அவர்களும் மனிதர்கள்.அவர்களின் வாழ்க்கை முறை வேறு. அதற்கான சில காம்ப்ரமைஸ்களை அவர்கள் விரும்பா விட்டாலும் கூட செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள்.அவர்களுக்கு இருக்கும் பணத்தையும், புகழையும் தான் நாம் பார்க்கிறோம். மன அழுத்தத்தில் இருக்கும் எத்தனை நடிக, நடிகைகளை நமக்கு தெரியும்.? நடிகை சில்க், விஜி, மோனல், பிரத்யுக்ஷா, நடிகர் குணால் என்று எத்தனை பேர், மன அழுத்தம் காரணமாக தவறான முடிவுக்கு போய் இருக்கிறார்கள்.


நம் வீட்டில் உள்ள குப்பைகளுக்காக, மட்டும் நாம் கவலைப் படுவோம். அதனை சுத்தப்படுத்த முயற்சிப்போம். பிறர் வீட்டில் உள்ளவைகளை என்ன செய்ய வேண்டும்? என்று அவர்கள் பார்த்து கொள்வார்கள்

Post a Comment

أحدث أقدم