89 வயது கணவர் தாம்பத்திய உறவுக்கு வற்புறுத்துவதாக 87 வயது மூதாட்டி புகார்89 வயது கணவர் தன்னை தாம்பத்திய உறவுக்கு வற்புறுத்துவதாக அவரது 87 வயது மனைவி உதவி மையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலம் வதோதராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


89 வயது முதியவர் தன் உடல்நலம் சரியில்லாத மனைவியை தாம்பத்திய உறவுக்கு இணங்குமாறு அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.


கணவரின் தொல்லையை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கமுடியாத அந்த மூதாட்டி பெண்களுக்கான `அபயம்' ஹெல்ப் லைனுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார்.


இது தொடர்பாக அபயம் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,


``89 வயதான முதியவர் உடல் நலம் குன்றிய மனைவியை தாம்பத்திய உறவுக்காகக் கேட்டிருக்கிறார். கணவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத அந்த மூதாட்டியை அவர் தொடர்ந்து நச்சரித்ததாகக் கூறப்படுகிறது.


வயது முதிர்வு காரணமாக மூதாட்டியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அந்த மூதாட்டி படுத்த படுக்கையாகிவிட்டார்.


இந்த நிலையில், தன் மனைவியின் நிலை குறித்து அறிந்திருந்த முதியவர், படுத்த படுக்கையான நிலையிலும் உடல் உறவுக்கு வற்புறுத்தியிருக்கிறார்.


இதனால் அபயம் ஹெல்ப் லைனுக்கு தொடர்பு கொண்டு அந்த மூதாட்டி புகார் அளித்திருக்கிறார். கணவருக்கு ஆலோசனை வழங்க முயன்றோம். முதியவரிடம் யோகா செய்ய முயலுமாறு கேட்டுக்கொண்டோம்.


அந்த முதியவரை பாலியல் நிபுணரிடம் அழைத்துச் செல்லும்படி குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டோம்" என அந்த அவசர சேவை மைய அதிகாரிகள் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post