சுய இன்பம் பற்றிய தவறான தகவல் இவை தான்


சுய இன்பம் எப்போதும் தடைசெய்யப்பட்ட விஷயமாகவோ தவறான செயலாகவோ மக்களிடம் கருதப்படுகிறது.


சுய இன்பம் ஒரு இயற்கையான, இயல்பான நடைமுறையாக இருந்தாலும் கூட, இதைச் செய்வதால் பக்க விளைவுகள் வரலாம் எனப் பல தவறான எண்ணங்களை உருவாக்கி மக்களை அச்சுறுத்துகிறார்கள்.


பாலியல், உடலுறவு, மனநலம் போன்றவற்றை முன்பு பெரிதாக யாரும் பேச முன்வருவதில்லை. ஆனால், தற்போது இத்தகைய தலைப்புகளில் தயக்கம் இன்றிப் பேச முன்வருகிறார்கள். இச்சூழலில் சுய இன்பம் பற்றிய சில தவறான நம்பிக்கைகளையும் சில கட்டுக்கதைகளையும் பேசி தீர்த்து, தவறுகளை உடைக்க வேண்டிய நேரம் இது.


இந்த நேர்மறையான மாற்றத்தைச் சேர்க்க வேண்டிய காலகட்டமும் இதுதான். ஆண் - பெண் தொடர்பான பாலியல் நல்வாழ்வைச் சுற்றியுள்ள தவறான நம்பிக்கைகளை உடைத்து எறிய வேண்டும். என்னென்ன தவறான புரிதல் உள்ளன? அதன் உண்மை நிலை என்ன என்பதைப் பார்க்கலாம்.


இதையும் படியுங்கள் - திருமணம் செய்த அன்றே கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டுமா


சுய இன்பம் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் / பார்வைத்திறனை இழக்க வைக்கும்


நிச்சயம், இது உண்மையில்லை. சுய இன்பத்திற்கும் குருட்டுத்தன்மைக்கும் இடையே எந்தவித தொடர்பையும் ஆய்வுகளில் கண்டறிய முடியவில்லை.


சுய இன்பத்திற்கும் குருட்டுத்தன்மைக்கும் இடையேயான தொடர்பைச் சுற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், தினமும் 4 முறை அல்லது அதற்கு மேல் பல ஆண்டுகளாக சுய இன்பம் செய்பவர்கள், சுய இன்பத்தால் ஏற்படும் எந்த நோய்களாலும் பாதிக்கப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.


சுய இன்பம் உங்களை அடிமையாக்கும்


வாரத்திற்குக் குறைந்தது 3-4 முறை சுய இன்பம் செய்வது மிகவும் சாதாரணமானதுதான். பல சந்தர்ப்பங்களில், மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை கூட சுய இன்பம் செய்கிறார்கள். அப்படிச் செய்வதால் அடிமையாகிவிடுவோம் என்று சொல்பவர்கள் கட்டுக்கதையை மட்டுமே வளர்கிறார்கள் என அர்த்தம்.


ஆனால், சுய இன்பம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகி உங்கள் தினசரி வேலையில் இந்த எண்ணம் குறுக்கீடு செய்தால் மட்டுமே, நீங்கள் ஒரு பாலியல் நல ஆலோசகரை அணுக வேண்டும்.


இதையும் படியுங்கள் - உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும் தெரியுமா


சுய இன்பம் விறைப்புத்தன்மையைச் செயலிழக்க வைக்கும்


விறைப்புத்தன்மை இல்லாமல் போவது என்பது உடலுறவின் போது விறைப்புத்தன்மையைச் சீராகக் குறிப்பிட்ட நேரம் வரை பராமரிக்க இயலாமல் போகின்ற நிலையைக் குறிக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் வேறுபடலாம். குடிப்பழக்கம், புகை, உடல்பருமன், வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம். ஆனால் சுய இன்பம் செய்வதால் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பதில் உண்மை அல்ல. வழக்கமாகச் செய்யும் சுய இன்பம் உங்களை மகிழ்விக்கும். அவ்வளவுதான்.


சுய இன்பம் உங்களை மலட்டுத்தன்மையுடைய செய்யும்


சுய இன்பத்திற்கும் குழந்தையின்மைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அதனால்தான் இந்தக் கட்டுக்கதையை நீக்கி விழிப்புணர்வைப் பரப்புவது முக்கியம்.


மக்கள் தனியாக இருக்கும்போது மட்டுமே சுய இன்பம் செய்கிறார்கள்


பலர் தனியாக இருக்கும்போது சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், உங்கள் துணையுடனான பாலியல் பழக்கங்களில் சுய இன்பமும் சேர்க்கப்படலாம். தவறு இல்லை. சிலர் தங்கள் துணையுடன் சேர்ந்து சுய இன்பம் செய்வதை விரும்புகிறார்கள். இதுவும் இயல்பான ஒரு செக்ஸ் முறைதான். ஏனெனில் சிலருக்கு தன் துணையுடன் சுய இன்பம் செய்வது மிகவும் பிடித்து இருக்கலாம். அதை அவர்கள் ரசிக்கக்கூடும். மேலும், இது செக்ஸுக்கு பல விதங்களில் உதவக்கூடும். தன் துணை உச்சக்கட்டத்தை அடைய உதவும். செக்ஸில் திருப்தி அடையச் செய்யும்.

Post a Comment

Previous Post Next Post