பெண்களை பற்றிய சுவாரஸ்யமான உளவியல் சிந்தனைகள்உலகில் ஏதோ ஒரு மூலையில்…ஒவ்வொரு 90 வினாடிக்கும்… ஒரு பெண் பிரசவத்தினால் அல்லது கர்ப்பம் தொடர்பான பிரச்சனையினால் இறந்து போகிறார்🤰


பெண்கள் ஒரு வருடத்தில் 120 மணி நேரங்கள் தங்களை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள செலவிடுகிறார்கள்🪞


பெண்களுக்கு தங்களிடம் அறிவுரை கேக்கும் மற்றும் குழந்தைகள் அல்லது பிராணிகளிடம் அன்பாக இருக்கும் ஆண்களை ரொம்ப புடிக்கும் 🐕


பெண்கள் ஒருநாளில் 20 000 க்கும் மேற்பட்ட வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள்🗣️


வெள்ளைக்கார பெண்களை காட்டிலும் கருப்பினத்தை சேர்ந்த பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகமான சவால்களை எதிர்நோக்குகிறார்களாம். இவர்கள் அதிகப்படியான மனவுளைச்சளுக்கும் ஆளாகிறார்கள்👩🏽


பெண்களால் ஒருவரின் முகத்தை கண்டு, அவரின் மனதை புரிந்துகொள்ள முடியும்💁‍♀️


வாகனம் ஓட்டும் பயிற்சியில் தேர்ச்சி பெற…பெண்களுக்கு ஆண்களை விட கூடுதல் நேரம் தேவைப்படுகிறது🚕


இதையும் படியுங்கள் - மனைவி, கணவரிடம் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக பேசினால் தவறா


ஒரு சில பெண்களை மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்த முடியாது…. அவர்களை சமாதானப்படுத்திய பிறகுதான் மன்னிப்பு கேக்கவேண்டும்🙏


70% பெண்கள் தங்கள் வேதனையையும் வலியையும்… மௌனத்தால் வெளிப்படுத்துகிறார்கள்😶


பெண்களின் இருதயம் ஆண்களின் இருதயத்தை விட வேகமாக துடிக்கும்🫀


பெண்கள் சமாதானப்படுத்துவதில் கைத்தேர்ந்தவர்கள்🫂


பெண்கள் ஒரு நிமிடத்தில் 19 முறை கண்ணிமைக்கிறார்கள்👁️


பெண்களுக்கு உடம்பு முழுக்க கண் என்று சொல்லுவார்கள். ஒருவர் தன்னை எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாலும் அவர்களால் அதை உணரமுடியும்👀


பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உண்டு💪


ஒரு சராசரி பெண்ணால் 47 மணி நேரம் 15 நிமிடம் மட்டுமே ஒரு ரகசியத்தை பாதுகாக்க முடியும்🤭


பெண்களால் ஆண்களை காட்டிலும் அதிகமான வலியை பொறுத்துக்கொள்ள முடியும். இதற்கு அறிவியல் ரீதியான சான்றும் உள்ளது. So, மனதளவில் மட்டுமன்றி உடலளவிலும் ஒரு பெண் வலிமையானவளே!👏


பெண்ணானவள் தன்னை ஒரு ஆண் புகழுவதை விட…. ஒரு பெண் புகழுவதை இன்னும் அதிகமாக விரும்புகிறாள். ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்ணிடம் செய்யக்கூடாத ஒரு தவறு, அவள் முன்னிலையில் இன்னொரு பெண்ணை புகழுவது🤐


பெண்கள் ஒரு வருடத்தில் 30–64 முறை அழுகிறார்கள். ஒரு நாளில் 62 முறை சிரிக்கிறார்கள்.😪


பெரும்பாலான பெண்கள் தங்களுடைய கணவனை அல்லது காதலனை பிற பெண்கள் பாக்கக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அவர்களுக்கு ஒருசில உணவுகளை கொடுத்து, அவர்களை பருமனாக்குகிறார்கள் 🥙


நாம் கேக்காமலே நமக்கு சமைத்து தரும் பெண்கள், நம் மீது அதிகமான அன்பை வைத்திருக்கிறார்கள்🍜


இதையும் படியுங்கள் - உடலுறவு முடிந்த பிறகு பெண்கள் ஏன் அழுகிறார்கள் தெரியுமா


பெண்கள் என்ன உடை உடுத்தவேண்டும் என்பதை முடிவுசெய்யவே….. தங்கள் வாழ்நாளில் ஒரு வருடத்தை செலவிடுகின்றனர்👗


உலகத்திலேயே இரண்டாவது கொடூரமான வலி, பிரசவ வலியாகும். முதலாவது கொடூரமான வலி உயிரோடு எரிக்கப்படுவது. தவறேதும் செய்யாமலே "உடன்கட்டை ஏறுதல்" என்னும் பெயரில் அக்காலத்தில் பல பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்🔥


பெண்களால் ஒரு விசயத்தை மிக மிக துல்லியமாக கணிக்க முடியும். "பெண் புத்தி பின் புத்தி" என்று முன்னோர்கள் சொல்லி சென்றதை… பலர் பெண்கள் பிற்போக்கு சிந்தனையாளர்கள் என்று தவறாக எடுத்து கொண்டார்கள். உண்மையில், பின்னே வருவதை முன்னே கணிப்பவள் பெண், என்பதே இதன் பொருளாகும்.🌀


பெண்கள் ஆண்களை விட மிக சீக்கிரமாக பேச, எழுத, படிக்க கற்றுக்கொள்கிறார்கள்📖


ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக 4 வருடங்கள் மாதவிடாய் அனுபவிக்கிறாள்📝


ஒரு பெண்ணுக்கு பிடித்த பாடல்… அவள் உதடுகளை விட அவளை பற்றி அதிகமாக சொல்லிவிடும்🎶


90% பெண்கள் தங்களுக்கு தெரியாத குழந்தைகளை உரிமையோடு கொஞ்சுகிறார்கள்👶


உதட்டுசாயம் (லிப்ஸ்டிக்) பயன்படுத்தும் பெண்கள், ஏறக்குறைய 2 அல்லது 3 கிலோ லிப்ஸ்டிக்கை சாப்பிட்டு முடிக்கிறார்கள் 💄


ஒருவர் தன்னிடம் பொய் பேசுகிறார் என்று தெரிந்தால்… அவர்களிடம் ஒன்னும் கேக்காமல், வெறிக்க வெறிக்க பார்ப்பார்களாம்🤨


பெண்கள் தங்கள் காதலனை விட அவர்களின் தம்பி/அண்ணண்களை அதிகமாக நேசிக்கிறார்களாம்🤗


ஒரு பெண் சிறுவயதில் எப்படி இருந்தாரோ… அதே மனநிலையில் வளர்ந்தபிறகு இருக்க வாய்ப்பில்லை. சிறுவயதில் குழந்தைத்தனமாக இருந்தவர் தற்போது மனமுதிர்ச்சியுடனும் (mature), சிறுவயதில் மனமுதிர்ச்சியுடன் இருந்தவர், பிறகு குழந்தைத்தனமாக மாறிவிடுவார்களாம்🤔


33% பெண்கள் தாங்கள் பருமனாக இருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் 52% பெண்கள் தங்கள் உடல் எடையை குறைப்பதில் ஈடுபடுகிறார்கள். அதாவது உலகில் 19% பெண்கள் தேவையில்லாமல் உடல் எடையை குறைக்கிறார்கள்🏃‍♀️


100 பெண்களில் 1 பெண் மட்டுமே தன் காதலனை திருமணம் செய்து கொள்கிறார்😥


ஒருசில பெண்கள் கொஞ்சம் திமிருடன், யாரையும் நம்பாமல், கடு கடுவென இருப்பார்கள். இவர்கள் யாருடனும் பழகாமல் தன்னை சுற்றி ஒரு பெரிய மதில் எழுப்பியிருப்பார்கள். சமுதாயமும் கடந்து சென்றவர்களும் அவர்கள் மீது வீசிய கற்களே அங்கு மதிலாக நின்றிருக்கும்🧱


75% பெண்கள் தனக்கு விடை தெரிந்தபிறகே கேள்வியை கேக்கிறார்கள்🧠


ஒரு சராசரி பெண் தன் வாழ்நாளில் 25181 மணிநேரங்கள் மற்றும் 53 நிமிடங்கள், ஷாப்பிங் செய்ய செலவிடுகிறார்🛍️


உளவியல் படி, நம்மால் நாம் நேசித்தவரை வெறுக்கமுடியாது.ஆனால் அதே உளவியல் படி, ஒரு பெண் எந்தளவிற்கு ஒருவரை நேசிக்கிறாளோ, அந்தளவுக்கு அவரை வெறுக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது🔍


பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் அதிகமான கெட்ட கனவுகள் வருகிறதாம்😴


ஐந்தில் இரண்டு பெண்கள் அனுதாஃபோபியா (anuthaphobia) என்னும் போபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது காதல் கிடைக்காது போய்விடுமோ என்கிற பயம்😰


100% ஒரு பெண்ணின் மனதை புரிந்துகொண்டவர் யாருமில்லை🙎‍♀️


ஒரு பெண் கோவமாக பேசிகொண்டிருக்கும்போதே அவர் கண்கள் கலங்குகிறது என்றால் அவர் மனதில் கோவத்தை காட்டிலும் வலி அதிகம் இருக்கிறது என்று அர்த்தம்😔


ஒரு பெண் அழவேண்டிய இடத்தில் சிரிக்கிறார் என்றால், அவரை விட மிக ஆபத்தான விஷயம் வேறில்லை😈


பத்தில் ஏழு பெண்கள் எப்போதுமே தங்களை குறைத்து மதிப்பிடுகிறார்களாம்💯


பெரும்பாலான பெண்களுக்கு திருமணம் முடிந்தபிறகுதான் தாயுடன் மிக நெருக்கமான உறவு ஏற்படுகிறதாம்👩‍❤️‍👩


தன் வாழ்வில் போதிய அன்பை பெற்றிடாத பெண், உண்மையான அன்பு கிடைத்தாலும் அது நிலைக்குமா, நிலைக்காதா? உண்மையானதா?, போலியா? என்று எண்ணியே, ஒரு முடிவுக்கு வராமல் காலத்தை வீணடிப்பாளாம்💕

Post a Comment

Previous Post Next Post