திருமணம் செய்த அன்றே கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டுமா


பொதுவாக செக்ஸ் சுகம் என்பது உடலுறவு கொள்வதால் மட்டுமே கிடைக்கும் எனப் பலர் நினைத்துக்கொள்கிறார்கள். விபரம் புரியாமல் இப்படி நினைப்பதால், நிறையத் திருமணங்கள் பெண்களுக்கு செக்ஸ் பற்றிய நல்ல உணர்வைத் தராமல் இருக்கின்றன. சில திருமணங்கள் இதனால் முறிந்தும் விழுகின்றன.


இந்தப் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமில்லை. மனைவி ஒத்துழைக்கவில்லை என்றால் கணவனுக்கும் அது திருப்தி தராமல் போகிறது. ஆதிகாலத்தில் மனித சமூகம் பெண்களைச் சார்ந்து இருந்தது. பெண் தலைமை தாங்குவாள். தாயைக் கடவுளாக வழிபட்ட மரபில்தான் மனித சமூகம் தழைத்து வளர்ந்தது.


குடும்பம் சார்ந்த சொத்துரிமை பற்றிய உணர்வு எழும்போது, ஆண் ஆதிக்கச் சமூகமானது. பெண்ணைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக செக்ஸ் விஷயத்தில் பெண்ணுக்கு நிறையக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கப் பல சமூகங்கள் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.


இதனால் பெண்ணுக்கு நிறையத் தயக்கங்கள் இருக்கும். எதுவும் வெளியில் சொல்ல முடியாது. செக்ஸை பாவ காரியமாகவும் தப்பான விஷயமாகவும் நினைக்கும் அளவுக்குத் தவறாகப் போதித்து வளர்க்கப்படுகின்றனர்.


இதையும் படியுங்கள் - முதலிரவு அறையில் ஆரம்பமாகும் பெண்களின் வாழ்க்கை


இது கடமை என்றும் கணவன் என்ன செய்தாலும் அனுமதிக்க வேண்டும், ஒத்துழைக்க வேண்டுமென்றும் ஆண்கள் முரடர்கள் அவர்கள் அப்படிதான் நடப்பார்கள் என்றும் பல தவறான அறிவுரைகளைப் பெரியவர்களே பெண்களுக்குச் சொல்லித் தருகின்றனர். இதனால் செக்ஸ் விஷயத்தில் இயல்பாக எழ வேண்டிய பரவச உணர்வைவிடப் பயமே ஆதிக்கம் செலுத்துகிறது. குழப்பங்களும் ஏமாற்றங்களும் வருகின்றன.


அதுவும் ஆண்களுக்குத் திருமணம் ஆன முதல் நாளிலே உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் ஏதோ தான் எதற்கும் லாயக்கு இல்லை எனத் தன் சக நண்பர்கள் நினைப்பார்கள் என்றும் தன் மனைவி நினைப்பாள் என ஏதேதோ தவறாகப் பதட்டமாகச் செய்து செக்ஸ் விஷயத்தில் பயம் ஏற்படவோ வெறுப்பு ஏற்படவோ செய்கிறார்கள்.


காதல் திருமணமோ பெற்றோர் நிச்சயித்து நடந்த திருமணமோ திருமணமான முதல் நாளிலேயே எல்லாமும் செய்துவிட அவசியம் ஒன்றும் இல்லை. அப்படி முதல் நாளிலேயே உறவுகொள்ளும் பழக்கமும் அந்தக் காலத்தில் இல்லை எனக் காமச்சூத்திரம் சொல்கிறது. 10 நாட்கள் கழித்துத் தான் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். அந்தக் காலத்தில் உப்பு, காரம் குறைவான உணவுகளை உண்ணும் பழக்கமும் முதல் 10 நாட்களுக்கு இருந்து இருக்கிறது.


எல்லாவற்றையும் இந்தக் காலத்துடன் இணைத்து ஒப்பிட்டுப் பின்பற்ற முடியாது என்றாலும் சில விஷயங்களைப் பின்பற்றலாம். இதனால் செக்ஸ் விஷயங்களில் சொதப்பாமல் இருக்க முடியும். திருமணம் ஆன பிறகு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு ஆண் தனது மனைவியிடம் இன்பத்தைத் தூண்டும் விதமாகவோ தூண்டல்கள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். இதனால் பெண்ணும் இவன் வேஸ்ட் என நினைத்துவிடாமல் இருக்கத் தெளிவாகப் பேச மட்டும் செய்யலாம். முதலில் பயம், கூச்சம், தயக்கம், உடல் சோர்வு இதெல்லாம் நீங்கிய பிறகு உடலுறவு கொள்ளுதல் நல்ல உறவாகத் தொடங்கும். ஆண், மென்மையாகப் பேசி புது மனைவியின் தயக்கத்தை அகற்றும்போது உறவு நன்றாக இருக்கும்.


பெண்கள் இயல்பாகக் கொஞ்சம் தயக்கமும் மென்மையும் இருக்கும். நல்ல அறிமுகம் பரஸ்பரம் இல்லாத சூழலில் பலவந்தமாகவோ பெண்ணுக்கு பிடிக்காதபடியோ ஆண் எதையும் செய்து தொடங்கிவிட்டால் உறவில் சிக்கல் உண்டாகும். உறவுக்குக் கட்டாயப்படுத்தினாலும் பிரச்சனை எழும்.


இதையும் படியுங்கள் - உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும் தெரியுமா


எனவே, பெண்ணின் விருப்பங்கள் என்ன என்பதை அறிந்துகொண்டு, சமயோசிதமான யுக்திகளைக் கடைப்பிடித்து, அந்தப் பெண்ணின் தற்காப்பு வளையத்தை ஊடுருவிச் சென்று நெருங்கி, அவளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பெண்ணுக்கு மிகவும் பிடித்த விதத்தில், இனிமையாக இன்பம் தரும் விதத்தில் தூண்டல்கள் இருக்கலாம். பெண்ணை உறவுக்குச் சம்மதிக்க வைக்கும் கொஞ்சலும் கெஞ்சலும் திருமண உறவை சுவாரஸ்யமாக மாற்றும். காமச்சூத்திரத்தில் பெண்ணை உறவுக்கு அழைக்கக் கால்களில் விழுவதும் சொல்லப்படுகிறது. இது நகைச்சுவை போக்கில் உறவின் தொடக்கமாக இருக்கும். உறவு தொடங்கும்போதே மகிழ்ச்சியாகத் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு எனச் சொல்லப்படுகிறது.


அவசரப்படாமல், மெதுவாக, பொறுமையாகத் தன் அன்பையும் நேசத்தையும் கணவன் வெளிப்படுத்த வேண்டும். நேரடியாக உறவுகொள்வதைத் தவிர்த்து வேறு தூண்டல் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். மனைவிக்குத் தன் மீது அன்பு வரும்படி ஆண் நடந்துகொள்ள வேண்டும். அவளுக்கு உண்மையாக இருப்பேன் என உறுதிமொழி கொடுக்கலாம். நம்பிக்கையை வளர்க்கலாம். அவசரப்படாமல் பயமுறுத்தாமல் படிப்படியாகப் பெண்ணுக்கு நம்பிக்கை அளித்த பிறகு பெண்ணைத் தாம்பத்திய உறவுக்குத் தயார் செய்வது நல்லது. இப்படிச் செய்தால் அந்தப் பெண் கணவன் மீது அன்பைப் பொழிந்து ஆசையோடு இருப்பாள். வெறுப்பு, சந்தேகம், கோபம், ஏமாற்றம் போன்ற உணர்வுகள் எழாது


உலகத்தில் இருக்கின்ற எல்லா செக்ஸ் அறிவியல் நூல்களிலும், தாம்பத்திய உறவில் உணர்வு ரீதியான திருப்திக்குக் குறிப்பாகப் பெண்ணின் உணர்வு ரீதியான திருப்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது காமச்சூத்திரம்தான்.


திருமணம் பந்தம் தாண்டிய வேறு உறவுகள் வரக் காரணம், தன் துணை மீது வரும் வெறுப்பு, ஏமாற்றம், கோபம். தாம்பத்திய உறவில் எனக்குத் தனித்திறமை உள்ளது. என்னால் நீண்ட நேரம் இயங்க முடியும் என ஒருவர் நினைக்கலாம். ஆனால், பெண்ணின் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வதுதான் உண்மையிலேயே தனித்திறமை. அப்படி யார் புரிந்துகொண்டு நடக்கிறாரோ அவரையே பெண்ணும் நேசிப்பாள்.


திருமணம் நடந்த முதல் மூன்று நாட்களுக்கு உடலுறவு வேண்டாம் எனக் காமச்சூத்திரம் சொல்கிறது. இதையே நவீன செக்ஸும் சொல்கிறது. தொடுதல் போன்றவற்றின் மூலம் இருவருக்கும் நெருக்கம் வளர்வதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இந்தச் சிகிச்சையை 'சந்தோஷம் தரும் பயிற்சிகள்' என்று நவீன செக்ஸ் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post