ஆணுக்கு அதிக பாலியல் உணர்வை தூண்டுவது எதுனு தெரியுமா


சில ஜோடிகளைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அந்தப் பெண் அழகாக இருப்பாள். ஆண் அழகாக இருக்க மாட்டான். அதேபோல ஆண் அழகாக இருப்பான். பெண் அழகாக இருக்க மாட்டாள். இதைப் பார்த்துக் கிராமங்களில் சிலர் கிண்டல்கூட அடிப்பார்கள். தோற்றம், உயரம், நிறம், அழகு போன்றவற்றை ஒப்பிட்டுக் கிண்டல் செய்வது வழக்கம். ஆனால், அவர்கள் இந்தப் பொருத்தமற்ற பிணைப்பு பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். எப்படி? ஏன்?


அவர்கள் அத்தனை சந்தோஷமாக வாழக் காரணம், ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்திருப்பதுதான். மனதைப் புரிந்துகொள்வதிலே எல்லாமும் அடங்கியிருக்கிறது. சிறந்த ஹஸ்பண்ட் மெட்டிரியல், சிறந்த வைஃப் மெட்டிரியல் எனச் சொல்லப்படுவது உண்மையில் மனதைப் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது. அழகு, ஈர்ப்பு, காதல், அன்பு, அக்கறை, செக்ஸ், இன்பம், மகிழ்ச்சி எல்லாமே வருவது மனதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவதன் மூலம்தான்.


எத்தனை பிஸி நேரங்களிலும் ஒரு போன் செய்து சாப்பிட்டியா? என்ன பண்ற? போன்ற கேள்விகளில் உறவின் ஆழம் தெரியும். அக்கறை புரியும். முன்னுரிமைகள் வெளிப்படும். பயத்தால் இந்தக் கேள்விகள் வெளிப்படுவது அல்ல. இன்செக்யூரிட்டியோ சந்தேகமோ கிடையாது. அன்பால் அக்கறையால் வெளிப்படுவதுதான் இப்படியான அக்கறை கேள்விகள்.


இதையும் படியுங்கள் - உடலுறவில் முழு இன்பம் கிடைக்க இப்படி செய்து பாருங்கள்


குடும்ப உறவுகளில் பெரும்பாலும் சிக்கல்கள் வருவது ஒருவரை ஒருவர் திருமணத்துக்குப் பிறகு பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான். இதற்குக் காரணமாக பிஸி, வேலை, டெட் லைன், மீட்டிங், டார்கெட், ஸ்ட்ரெஸ், பிரஷர், டைம் இல்லை, வொர்க்காலிக் எனப் புதுப்புது பெயர்களைத் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப வைத்துக்கொள்கிறார்கள். இதெல்லாம் சாக்கு சொல்லும் வேலையே தவிர உறவுக்குத் தரும் மரியாதை இல்லை. இப்படிச் சொல்பவர்கள் நல்ல ஹஸ்பண்ட் மெட்டிரியலாகவோ வைஃப் மெட்டிரியலாகவோ இருக்க முடியாது. இவர்களது உறவில் சிக்கல்கள் இருக்கலாம். நிம்மதி இல்லாமல் இருக்கலாம். தன் துணை இல்லாத வேறு உறவில் விருப்பம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்.


'மனதைத் தொடும் கலை'யை கற்றுக்கொள்வது ஒன்று பெரிய 'ராக்கெட் சைன்ஸ்' கிடையாது. அது ஒரு சிம்பிளான டாபிக்தான். அதற்கான நேரமும் முக்கியத்துவமும் கொடுத்தால் மட்டும் போதும். வாழ்க்கையில் இன்பமாக வாழ்ந்திட முடியும்.


ஆதிகாலத்திலிருந்து இன்பமான வாழ்க்கைக்கு என்ன வழி என மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். ஆனால், இந்தத் தேடல் தன்னில் தேட வேண்டும் என்பது மட்டும் அவனுக்குப் புரிவதில்லை. தன்னில் உள்ள தவறுகளைத் திருத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டு மருந்துகளைத் தேடிக் கொண்டிருக்கிறான். இந்தப் பிரச்சனை ஆதிகாலத்திலிருந்து தொடர்கிறது. செக்ஸ் திறமையை மேம்படுத்தும் அதிசய மருந்தைத் தேடுவது வழக்கமாகியுள்ளது. ஏதாவது பிரச்சனை இருப்பவர்கள் தேடுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், இயல்பான தாம்பத்திய சுகத்தை அனுபவிப்பவர்களும், இன்னும் வீரியம் தேடிப் போவது சிரமம்தான். ஒருவகையில் இது பேராசையும்கூட.


இதையும் படியுங்கள் - உடலுறவுக்காக பயன்படும் பொம்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா - தெரிஞ்சிகோங்க


இந்திய மண்ணின் மருத்துவம், 'ஆயுர்வேதம்'. அந்தக் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் மருத்துவ முறை இது. ஆயுர்வேதமும் காமச்சூத்திரமும் தோன்றிய இந்திய மண்ணில், இப்படிப்பட்ட வீரியம் தரும் மருந்துகள் மீது உள்ள நம்பிக்கை பரவலாக இருக்கிறது. பிரபலமாகவும் இருக்கிறது.


இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பழங்காலத்திலிருந்தே ஆயுர்வேத நூலான 'சரக ஸம்ஹிதை'யில் ஒரு முழு அத்தியாயம் இதற்காக இருந்தது. அதாவது இந்த நூலில் 'வாஜிகரணம்' ஒரு குதிரை போல வலிமை பொருந்தியவனாக ஒரு ஆணை மாற்றுவது பற்றி இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும். வெறும் மூலிகை மருந்துகள் மட்டுமல்லாமல், மனோரீதியான வழிகளும் அதில் சொல்லப்பட்டிருக்கும்.


உண்மையில், 'ஒரு ஆணுக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டும் மிகச் சிறந்த மருந்து, பெண்தான்'. எந்த ஒரு பெண்ணின் நெருக்கம், தொடுதல், காதல் அவனது அத்தனை புலன்களையும் தூண்டிக் கிளறச் செய்கிறதோ, அந்தப் பெண்ணே அவனுக்கு மருந்து. ஒருவேளை அப்படிப்பட்ட பெண் கிடைக்கவில்லை என்றால்தான் மருந்துகளைத் தேட வேண்டும் எனச் சரகரால் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் அவர் சொல்லும் மருந்து மூன்று வகையானது. முதலாகச் சத்தான உணவுகள், இரண்டாவது மனோரீதியான தூண்டல், மூன்றாவதுதான் மருந்து. ஆனால், பெரும்பாலானோர் முதல் இரண்டு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள் அல்லது அதில் கவனமோ அக்கறையோ செலுத்துவதில்லை. வெறுமனே மூன்றாவது விஷயமான மருந்தின் பின்னால் ஓடும் மனநிலை மட்டுமே எங்கும் நிறைந்து இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post