காமம் போரடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்ஒரு தேசத்தின் பொதுவான பழக்கத்தை வைத்து மட்டும் பெண்களை அறிந்துகொள்வது முழுமையாக இருக்காது. காமச்சூத்திரத்தில் சொல்லப்பட்டவை பல ஆண்டுகளுக்கு முன், பல தலைமுறைகளுக்கு முன். பல விஷயங்கள் இப்போது அடியோடு மாறிவிட்டன. முந்தைய கருத்துகள், பழைய கருத்துக்களை இன்னும் வைத்துக்கொண்டு பெண்களை அணுகினால் அது முறையாக இருக்காது. இன்றைய காலத்தில் எல்லாமே மாறிவிட்டன. அதைப் புரிந்து பெண்ணை அணுகுங்கள்.


வேண்டாம் எனப் பெண் மறுக்கும்போது, ஆண் வலுக்கட்டாயமாக உறவு மேற்கொள்ள முயன்றாலோ அது தவறான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்னதான் தம்பதிகளாக இருந்தாலும்கூட.


நவீன அறிஞர்கள் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். இது செக்ஸ் ஆராய்ச்சி பற்றியதுதான். அதாவது ஒரு தம்பதியர்களுக்கு இடையே என்னதான் அன்பு, காதல் எல்லாம் இருந்தாலும் பெரிதாகச் சண்டைகூட இல்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள்.


இதையும் படியுங்கள் - ஒரு ஆண் காமத்திற்காக மட்டும் ஒரு பெண்ணோடு பழகுவதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்


பல ஆண்டுகளாகக் கணவனும் மனைவியும் தாம்பத்ய வாழ்க்கையில் ஒருவர் மீது ஒருவர் அன்போடு காதலோடும் இருக்கின்றனர். ஆசையில்கூட துளிகூடக் குறையவில்லை. எனினும் அந்தத் தம்பதிக்கு செக்ஸ் மீது ஆர்வம் குறைந்துவிட்டது. இது ஏன் என நவீன செக்ஸ் அறிஞர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.


நீண்ட நாட்களாகத் தொடரும் ஒரே மாதிரியான எந்த உறவிலும், ஒருவர் இன்னொருவருக்கு உணர்ச்சி தூண்டுதலைத் தரமுடியாத நிலை ஒரு கட்டத்தில் வந்துவிடும். இந்த நிலைக்கு 'மனோரீதியான அயர்ச்சி' என்று பெயர் என செக்ஸ் அறிஞர் ஆல்பர்ட் கின்ஸி சொல்கிறார். மேலும் செக்ஸ் அறிஞர்களான மாஸ்டர்ஸ்கூட இதை 'செக்ஸ் உறவில் ஏற்பட்ட சலிப்பு' என்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Sexual boredom எனச் சொல்லப்படுகிறது.


தூண்டுதல் விளையாட்டில் கவனம் தேவை. ஒரே மாதிரியான முத்தம், செக்ஸூவல் பொசிஷன், கட்டி அணைத்தல் போன்ற எல்லாம் ஒரேமாதிரியாக இருந்தால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படத்தான் செய்யும். இது இயல்பு. ஏனெனில் எந்த ஒரு தூண்டுதலும் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், அந்தத் தூண்டுதலுக்கு ஆரம்பத்தில் வருகிற ரியாக்‌ஷன் அடுத்தடுத்த முறைகளில் வராது. ஒரேமாதிரியான தூண்டுதல் மீண்டும் மீண்டும் செய்திட, அந்தத் தூண்டுதலிலிருந்து இன்பமோ சுகமோ கிடைக்காது.. போரிங் வாழ்க்கையாக போரிங் செக்ஸாக மாறக்கூடும். செக்ஸிலும் இப்படி போரிங் நிலை வரும்..ஒரே அறை. ஒரே கட்டில்.. ஒரே மாதிரியான உணர்வு தூண்டுதல் முயற்சிகள் வெகுநாட்களுக்குப் பலன் அளிக்காது. ஒரு கட்டத்தில் இருவருக்குமே அலுப்பாகும்.


இதையும் படியுங்கள் - கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தன் ஆணுறுப்பை வெட்டிய விவசாயி


ஒவ்வொரு செயலிலும் காட்டும் வித்தியாசங்கள்தான் வாழ்க்கையின் போக்கை அழகாக மாற்றும். சுவாரசியப்படுத்தும். அதாவது வெரைட்டி முக்கியம். தினமும் ஒரே மாதிரியான உணவு எப்படி அலுக்குமோ. அதுபோல. தினமும் ஒரே மாதிரியாகக் கழியும் பொழுதுகள் சலிப்பை ஏற்படுத்தும். சிலர் தன் துணையை விட்டு வேற உறவுக்குள் செல்ல முக்கியக் காரணம் இந்த அலுப்புதான். எதிலும் மாற்றம் தேவைப்படுகிறது. மனதுக்கும். உணர்வுகளுக்கும்.


இங்கு மாற்றம் அவசியமாகிறது. துணையை அல்ல, செயலில்தான் மாற்றம் அவசியமாகிறது. வித்தியாசம் காட்டுங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்கிறார்கள் நிபுணர்கள். துணையை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் பழகுவது சமூக நியதிக்கு முரணானது. ஆனால், தூண்டுதல் முயற்சிகளில் வித்தியாசம் காட்டலாம். தன் துணையோடு புதுவிதமான செக்ஸ் நிலைகளை முயற்சிக்கலாம். தூண்டுதல், கொஞ்சல்களை மாற்றலாம்.


இதனால் செக்ஸ் வாழ்க்கை போரடிக்காமல் செல்லும். வேறொரு துணையைத் தேடும் முயற்சிகளும் தடுக்கப்படும். புது மாதிரியான தூண்டுதல் விளையாட்டு, காதல், காமம், அன்பு என வெரைட்டி அவசியம் பாஸ். அது புதுப் புது அனுபவத்தை உங்கள் துணைக்குக் கொடுக்கும்.


உணவில் வெரைட்டி போல. செக்ஸிலும் புதுப் புது முயற்சிகளைச் செய்து பாருங்கள்.

Post a Comment

أحدث أقدم