மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளகாதலன் - கண்டு கொள்ளாத தாய்


விழுப்புரம் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தவருக்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த உப்புவேலுரை கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். 20 வயதே ஆன இளைஞர் அதே பகுதியில் கணவரிடம் கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ள வாழும் சிவாகாமி என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு 6 வயதில் மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக அந்த பெண்ணின் 6 வயது மகளுக்கு பிரேம்குமார் அடிக்கடி ஐஸ் கீரிம் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதை அந்த சிறுமியின் தாயும் கண்டும் காணாமலும் இருந்து வந்துள்ளார். இதுக்குறித்து அக்கம்பக்கத்தினர் சிறுமியின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடித்து சிறுமியை அழைத்து வந்து அவரது அண்ணி வீட்டில் தங்கவைத்துள்ளார். அப்பொழுது சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறுமியிடம் அதுக்குறித்து விசாரிக்கப்வட்டது. அப்போது பிரேம்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.


இதனையடுத்து சிறுமின் தந்தை கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரனை செய்த கோட்டக்குப்பம் மகளிர் போலீசார் பிரேம்குமார் சிறுமிக்கு பல முறை பாலியல் தொல்லை கொடுத்து வன்புனர்வில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிரேம்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post