ஆதரவும் தேடி ஆன்லைன் வரும் பெண்களின் வேதனை


அன்பும் ஆதரவும் தேடி ஆன்லைன் வரும்

பெண்களிடம் சில ஆண்கள் அக்கா

என்பர் 

தங்கை என்பர்.


போட்டோ தரலேனா Unfriend

என்பர்.


போன் நம்பர் தரலேனா Fake என்பர்.


வாட்ஸ் அப் நம்பர் கொடுத்தா

வர்றியா என்பர். 


ரெண்டும் தரலேனா

நம்பிக்கை இல்லையா என்பர்.


கேட்டதும்

தந்துட்டா ஐட்டம் என்பர். 


அவர்களின்

விருப்பப்படி நடக்கா விட்டால் அவுசாரி

என்பார்கள். 


இதையும் படியுங்கள் - ஒரு சகோதரியின் பதிவு இது


இவை எல்லாம்

பெண்கள் ஆன்லைனில் சந்திக்கும்

கொடுமைகள். 


சகித்துக்

கொண்டுதான் முகநூலில்

இருக்கிறோம். 


இவை எல்லாம் பொய்

என்று யாராவது சொல்லத்

தயாரா. 


கழுத்து நிறைய நகை அணிந்து நடு

இரவில் ஒரு பெண் என்று தனியாக

தைரியமாக செல்ல முடிகிறதோ அன்று

தான் உண்மையான சுதந்திர நாள் என்று

சொன்ன காந்தி இன்று இருந்தால்

என்று ஒரு பெண் முகநூலில் தன் உண்மை

பெயருடனும் உண்மை உருவத்துனும்

இயங்க முடிகிறதோ அன்றுதான் முழு சுதந்திரம்

கிடைத்ததாகக் கருதப்படும் என்று

கூறியிருப்பார். 


பெண்களும் ஆண்களைப்

போல் மனித இனம் தானே. 


பிறகு ஏன் அவர்களை

ஏளனமாக நினைக்கிறீர்கள். 

Post a Comment

Previous Post Next Post