உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும் தெரியுமாஉடலுறவில் இது இப்படித்தான் எனப் பொதுமைப்படுத்தி எந்த விஷயத்தையும் சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட நபர்களின் விருப்பங்கள், வெறுப்புகள், ரசனைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொருவருக்குமான செக்ஸ் வாழ்க்கை அமைய வேண்டும். அது புகார்கள் இல்லாமல் இருப்பின் ஆரோக்கியமானதாகக் கருதப்படும்.


இந்த உடலுறவு கால விஷயத்துக்கு வருவோம். சிலருக்கு 15 நிமிடம் சிலருக்கு ஒரு மணி நேரம் ஆனால் அது அவர் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது.


இதையும் படியுங்கள் - ஆணுக்கு அதிக பாலியல் உணர்வை தூண்டுவது எதுனு தெரியுமா


ஹெல்த் லைன் மீடியா எனும் உடலுறவு சார்ந்த தகவல்களைக் கூறும் அமெரிக்க நிறுவனம், ஆணுறுப்பு - பெண்ணுறுப்பு இடையிடையிலான இன்டர் செக்ஸ் மட்டும் 13 நிமிடங்கள் நீடிக்கும் எனக் கூறியிருந்தது. ஆனால் அதில் மற்ற வகை உடலுறவு குறித்து எந்த தகவலும் சொல்லப்படவில்லை.


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உடலுறவு நிபுணர் நடியா பொகொடி ஒரு செய்தி தளத்தில் பேசும் போது, 33 வினாடி முதல் மணிநேரங்கள் வரை ஆகலாம். அது தனி நபர்களைப் பொறுத்தது எனக் கூறினார்.


அவரது ஆய்வில் சுவாரஸ்யமாக ஒரு விஷயத்தை அவர் கண்டறிந்ததாகக் கூறுகிறார். அதாவது, "ஆண்களை விடப் பெண்கள் தான் உச்சநிலையை அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களாம். ஆனால் பொதுவாக ஆண்களுக்குத் தான் அதிகநேரம் தேவைப்படும்" என்றார்.


இதையும் படியுங்கள் - கலவிப்பொருத்தம் என்றால் என்ன - அந்தரங்க தகவல்கள்


இது நிர்வாணப்படங்களின் விளைவாக இருக்கலாம் என அவர் கருதுகிறார்.


மேலும் அவர், "உடலுறவு என வரும் போது இங்கு நார்மல் என எதுவுமில்லை. சிலருக்கு ஒரு இரவு முழுவதும் செக்ஸ் நீடிக்கலாம், சிலர் சில நிமிடங்கள் முடித்துவுட்டு கதைப் பேசிக்கொண்டு படுத்துறங்களாம்" என்றார்.


Post a Comment

Previous Post Next Post