அழைபேசியால் அழிந்து போகும் பெண்களின் வாழ்க்கை
அழைபேசியில் மூழ்கிய உள்ளம்
அருகில் நடந்ததை அறிய மறந்து
ஆகாயத்தில் பறக்க //
எதிரே கண்ட இளைஞனை பார்த்து
ஏக்கத்தை சொல்ல அலைபேசியில்
முகவரி தேடி முயன்றபோது //
அங்கே ஒரு அறிமுகம் கிடைக்க
அத்தனை அவலத்துக்கும்
சொந்தக்காரன் சொக்கத்தங்கமாய்
சொக்கும் அழகில்
வண்ண வண்ண உடையில் வள்ளல்
போல் அறிவுரை கூறி அசத்தல்
மன்னனின் ஆசையை சொல்லசொல்ல
இதையும் படியுங்கள் - வலைதளங்களில் கிடைக்கும் தகவல்கள் உண்மையா என தெரிந்து கொள்வது எப்படி
வான் உயர வீடு வாசலிலே
வகைவகையான
கார்களுக்கு சொந்தமென்று
சொல்லால் மயக்க//
தேடல்கள் தொடரவே தேவதை
நீதான் என்று இரக்கமற்ற ஈனப்பிறவிகள்
சில ஏக்க பார்வைபட //
தன்னை விட அழகில்
யாருமில்லை என தற்பெருமை
சேர்ந்து கொள்ள தன்னையே
இழந்து //
வாழ்க்கையை தொலைத்த
கதைகளை எப்படி வெளியிலே சொல்ல முடியாமல்
வேதனையில் மாண்ட கதையை
எப்படி சொல்ல !!
Post a Comment