கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தன் ஆணுறுப்பை வெட்டிய விவசாயி 


கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தன் ஆணுறுப்பை விவசாயி ஒருவர் வெட்டிக்கொண்டுள்ள சம்பவம் கானா நாட்டில் அரங்கேறியுள்ளது.


கோஃபி அட்டா என்ற 34 வயதான நபர் நாற்காலியில் அமர்ந்தபடியே தன் வீட்டில் உறங்கியுள்ளார். அப்போது அவருக்கு கனவு வந்ததாகவும், அதில் ஆட்டு இறைச்சியை வெட்டுவதாக எண்ணி தன் ஆணுறுப்பை அவரே தவறுதலாக வெட்டியுள்ளார்.


வலியால் கனவு கலைந்து கண் விழித்து பார்த்தபோது இவ்வாறு நிகழ்ந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார் கோஃபி.


இதையும் படியுங்கள் - இந்த தேளின் விஷம் 80 கோடி ரூபாய் - உண்மை தான் மக்களே


அந்த சமயத்தில் அவரின் மனைவி வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில், வலியால் துடித்துக் கொண்டிருந்தவரை, அலறல் சத்தம் கேட்டு, அவரது அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.


நல்ல வேளையாக அவரது உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது ஓய்வில் உள்ள அவர் தன் கையில் எப்படி கத்தி வந்தது? நான் எப்படி இதை செய்தேன்? என தெரிவில்லை என்றார்.


இதையும் படியுங்கள் - அடேய் இவ்ளோ குறை சொன்னா எப்படி கல்யாணம் பன்றது


மேலும் கோஃபி தன் மனைவிக்கு மாலை உணவு தயாரிக்க உதவுவதற்காக ஆடு இறைச்சியை வெட்டுவது போன்று கனவு கண்டதை நினைவு கூர்ந்தார். "என் தூக்கத்தில், எனக்கு முன்னால் இறைச்சியை வெட்டுவது போல் கனவு கண்டேன்," என்று கோஃபி பிபிசி பிட்ஜினிடம் கூறினார்.


இவருக்கு மேற்படி ஒரு அறுவை சிகிச்சைசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை முடிந்து சுமார் ஒன்றரை மாதம் முறையாக ஓய்வெடுத்தால் இயல்பாக செயல்பட தொடங்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோஃபி தனது உயர் சிகிச்சைக்காக தற்போது நிதி திரட்டி வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post