இந்த தேளின் விஷம் 80 கோடி ரூபாய் - உண்மை தான் மக்களே



தேள் என்றால் விஷம், பயம், ஆபத்து என்றுதான் நாம் அறிந்திருக்கிறோம். சினிமாவிலும் மற்ற கலைகளிலும் தேள் என்றால் எதிர்மறையான பயங்கரமான ஒரு நச்சு உயிராகவே காட்சிப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த தேள், பணம் காய்க்கும் மரமாக பார்க்கப்படுகிறது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?


ஒரு லிட்டர் தேள் விஷத்தின் விலை 10 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்.


துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில் தான் இந்த பணி நடைபெற்று வருகிறது. ஒரு நாளுக்கு 2 கிராம் மட்டுமே நஞ்சு எடுக்கப்படுகிறது.


இதையும் படியுங்கள் - இந்த தண்ணீரில் இறங்கினால் மரணம் நிச்சயம் - அப்படி என்ன இருக்கிறது


தேள் நஞ்சு எப்படித் தயாரிக்கப்படுகிறது


தினமும் தேளை பெட்டியிலிருந்து எடுத்து அது ஒரு துளி நஞ்சை வெளியிடும் வரை காத்திருந்து அதனை ஆய்வாளர்கள் சேகரிக்கின்றனர்.


ஒரு தேளை இடுக்கி போன்ற கருவியால் பிடித்துக்கொண்டு மற்றொரு கருவியால் அதன் கொடுக்கை அழுத்தி நஞ்சு சேகரிக்கப்படுகிறது.


பின்னர் அதனை உறைய வைத்து, அரைத்து பொடியாக்கி விற்பனை செய்கின்றனர்.


"எங்களிடம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தேள்கள் இப்போது இருக்கின்றன. அவற்றுக்கு முறையாக உணவளித்து பராமரித்து வருகிறோம். இதன் மூலம் எங்களுக்கு நஞ்சு கிடைக்கிறது.


கிடைக்கும் நஞ்சை ஐரோப்பாவுக்கு விற்பனை செய்கிறோம்." என்கிறார் தேள் பண்ணை உரிமையாளர் மெடின் ஓரன்லர்.


இதையும் படியுங்கள் - அன்றைய காலகட்ட சினிமா டிக்கெட்- அழகான நினைவுகள்


தேள் நஞ்சின் பயன்கள்


நோய் எதிர்ப்பு மருந்துகள்


அழகு சாதனப் பொருட்கள்


வலி நிவாரணிகள் போன்றவற்றை உருவாக்க தேள் நஞ்சு பயன்படுகிறது. மூளைக்கட்டி (Brain Tumor) நோயை சரி செய்ய இது சிறந்த மருந்து என்று கூறப்படுகிறது.


ஒரு தேளில் 2 மில்லிகிராம் நஞ்சு இருக்கிறது. 300, 400 தேள்களில் இருந்து ஒரு கிராம் நஞ்சு கிடைக்கிறது.


Post a Comment

Previous Post Next Post